கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்த ராகுல் டிராவிட் விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் மும்முரம் காட்டிய பிசிசிஐ-யானது முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீரை புதிய பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அபிஷேக் நாயரின் பதவியை பறிக்கவுள்ள பி.சி.சி.ஐ :
ஏனெனில் கடந்த 2024 ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரை கொல்கத்தா அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக கம்பீர் திகழ்ந்தார். எனவே அவரின் மீது நம்பிக்கை வைத்து பிசிசிஐ அவரை பயிற்சியாளராக அறிவித்தது. அப்படி புதிய பயிற்சியாளராக பதவியேற்ற கௌதம் கம்பீர் சில நிபந்தனைகளுடன் தனக்கு பிடித்த குழுவினரை பயிற்சியளர் குழுவில் சேர்க்க வேண்டுகோள் வைத்தார்.
அதன்படி அபிஷேக் நாயர் மற்றும் டென்டெஸ்கோத்தே ஆகியோரை துணை பயிற்சியாளராகவும் மேலும் சில ஊழியர்களை பயிற்சி குழுவிற்குள் கொண்டு வந்திருந்தார். மேலும் இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் என்பவரும், ட்ரைனராக சோஹம் என்பவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் படுமோசமாக இழந்ததால் தற்போது பயிற்சியாளர் குழுவில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்திய அணி டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை கைப்பற்றி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னேற்றம் கொண்டு வரும் வகையில் புதிய நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்து வரும் அபிஷேக் நாயரை பதிவியிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று இந்திய அணியில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் நிர்வாகிகளையும் வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்திய பயிற்சியாளர் குழுவில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்கும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : சூப்பர் ஓவர் த்ரில்லர்.. பஞ்சாப் அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி அணி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
மேலும் இந்திய அணியின் தற்போதைய ட்ரெய்னர் சோஹன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய ட்ரெயினராக பஞ்சாப் அணியில் பணியாற்றி வரும் ஏட்ரியன் லி என்பவரை ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட காரணம் யாதெனில் : கம்பீருக்கு ஆதரவாக பயிற்சியாளர் குழு இருக்கும் வேளையில் அதனை உடைக்கவே பி.சி.சி.ஐ இப்படி சில முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.



