சூப்பர் ஓவர் த்ரில்லர்.. பஞ்சாப் அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி அணி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

Stubbs and Rahul
- Advertisement -

கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கிய நடப்பு 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும், விவாதமும் அதிகரித்து வருகிறது.

சூப்பர் ஓவரில் சாதனை நிகழ்த்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி :

நாளுக்கு நாள் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் நடைபெற்று வரும் வேளையில் இந்த ஆண்டின் முதல் சூப்பர் ஓவர் போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் அரங்கேறியது. அந்த வகையில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 188 ரன்களை குவிக்க இரண்டாவதாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சரியாக 188 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக போட்டி டை-யில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர்வரை சென்றது.

அப்படி நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பிறகு விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 பந்துகளில் 13 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதாவது இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை சூப்பர் ஓவர் வரை சென்று அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை டெல்லி அணி பின்னுக்கு தள்ளியுள்ளது. அதாவது பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் சூப்பர் ஓவருக்கு சென்று அதில் மூன்று வெற்றிகளை பெற்றிருந்தது.

இதையும் படிங்க : 20 ஆவது ஓவரை வீசும்போது என் மனசுக்குள் ஓடியது இதுமட்டும் தான்.. ரொம்ப ஹேப்பி – ஆட்டநாயகன் மிட்சல் ஸ்டார்க்

ஆனால் நேற்று டெல்லி அணி தங்களது ஐந்தாவது சூப்பர் ஓவர் போட்டியில் விளையாடி நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளதது. இதன் காரணமாக சூப்பர் ஓவருக்கு சென்று அதிக வெற்றிகளை குவித்த அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement