நேத்து நான் ஓப்பனிங் ஆட காரணமே அவர்தான்.. ஆனா ஆஸ்திரேலிய சீரிஸ்ல மிடில் ஆர்டர் தான் – இஷான் கிஷன் பேட்டி

Ishan-Kishan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதுவரை 16 முறை நடைபெற்றுள்ள ஆசிய கோப்பை தொடரில் எட்டு முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி 51 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தும் போது துவக்க வீரராக சுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் களமிறங்கியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது. ஏனெனில் தொடர்ச்சியாக சுப்மன் கில்லுடன் ரோகித் சர்மாவே விளையாடி வருகிறார். அதோடு அவர்களே உலகக் கோப்பை தொடருக்கான துவக்க வீரர்களாகவும் களமிறங்குவார்கள் என்பதால் இந்நேரத்தில் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்க என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியில் 18 பந்துகளை சந்தித்த அவர் மூன்று பவுண்டரிகளுடன் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்து தான் ஏன் துவக்க வீரராக களமிறங்கினேன்? என்றும் அந்த இடத்திற்கான அவசியம் என்ன? என்பது குறித்தும் தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : இன்று இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் தான் முழுக்க முழுக்க காரணம்.

சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக போட்டியை துவங்கி வைத்தனர். இந்த மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்வது அவ்வளவு எளிது கிடையாது. இருந்தாலும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருந்தோம். டீம் மீட்டிங்கின் போது எவ்வாறு சேசிங் செய்ய வேண்டும் என்று நிறைய பேசிக் கொண்டிருந்தோம். நான் எப்பொழுதுமே துவக்க வீரராக களமிறங்கவே விரும்புகிறேன்.

- Advertisement -

இந்த போட்டியில் இலக்கு பெரியதாக இல்லை என்றாலும் ரோகித் சர்மா என்னிடம் துவக்க வீரராக களமிறங்கும்படி கேட்டுக் கொண்டார். அணியின் நிர்வாகம் என்ன நினைக்கிறதோ அதனை செய்ய வேண்டியது என்னுடைய கடமை. அதற்காகத்தான் நான் நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்க வேண்டியிருந்தது. 50 ரன்கள் தான் அடிக்க வேண்டும் என்ற நிலையில் பெரிதாக ரன்களை அடிக்க முடியாது என்றாலும் இந்த வாய்ப்பினை வழங்கிய ரோகித் சர்மாவிற்கு நன்றி. என்னுடைய ரோல் என்ன என்பதை எனக்கு தெளிவாக தெரியும்.

இதையும் படிங்க : வீடியோ : 4, 6, 6, 6, 4, 6.. ஒரே ஓவரில் 32 ரன்கள்.. 41 பந்தில் மிரட்டலான சதம்.. வாழ்வா – சாவா போட்டியில் அதகளம் செய்த ஷாய் ஹோப்

நாங்கள் தற்போது உலக கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறோம். அடுத்ததாக உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய சீரிஸ் வர இருக்கிறது. அந்த தொடரில் நான் மிடில் ஆர்டரில் தான் விளையாடுவேன் என்று உறுதி செய்திருந்தார். ஏற்கனவே இதுபோன்று சில போட்டிகளில் இலக்கு குறைவாக இருந்தால் துவக்க வீரராக ரோஹித் சர்மா இஷான் கிஷனை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement