4, 6, 6, 6, 4, 6.. ஒரே ஓவரில் 32 ரன்கள்.. 41 பந்தில் மிரட்டலான சதம்.. வாழ்வா – சாவா போட்டியில் அதகளம் செய்த ஷாய் ஹோப்

Shai Hope
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் 2023 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்பிடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பார்பர்டாஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மேலும் 9 போட்டிகளின் முடிவில் இவ்விரு அணிகளுமே தலா 7 புள்ளிகளை பெற்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அதை தொடர்ந்து களமிறங்கிய கயானாவுக்கு ஆயுப் 16, ஓடின் ஸ்மித் 21 என தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கெல்வோன் ஆண்டர்சன் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

அதிரடி சதம்:
அதில் ஆண்டர்சன் சற்று மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்த மறுபுறம் வெளுத்து வாங்கிய சாய் ஹோப் பார்படாஸ் பவுலர்களை பந்தாடி வேகமாக ரன்களை சேர்த்து அரை சதமடித்தார். அதே வேகத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் 15 ஓவரின் முடிவில் 69* (35) ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அப்போது 16வது ஓவரை வீசிய ரஹீம் கார்ன்வாலை தெறிக்க விடும் அளவுக்கு முதல் பந்தில் பவுண்டரி அடித்த அவர் அதற்கடுத்த 2 பந்துகளில் மிட் விக்கெட் திசையில் அதிரடியான சிக்சர்களை பறக்க விட்டார்.

அத்தோடு விற்காமல் 4வது பந்திலும் ஹாட்ரிக் சிக்சர் அடித்த அவர் 5வது பந்தில் பவுண்டரி அடித்து 95* ரன்களை எட்டினார். அந்த சமயத்தில் இடைவெளி விடாமல் என்று இருந்த கடைசிப் பந்திலும் பிரம்மாண்ட சிக்சர் அடித்த அவர் 4, 6, 6, 6, 4, 6 என ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசி சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை 41 பந்துகளில் அடித்தார். இதன் வாயிலாக சிபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்து 2வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

முதலிடத்தில் ஆண்ட்ரே ரசல் 2018இல் 40 பந்துகளில் ட்ரினிடாட் அணிக்கு எதிராக 100 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் அதகளம் செய்த அவர் 9 பவுண்டரி 8 சிக்சருடன் 106 (44) ரன்கள் எடுக்க ஆண்டரசன் 47 (39) ரன்கள் எடுத்தார். அதனால் 20 ஓவர்களில் கயானா 226/7 ரன்கள் எடுக்க பார்படா சார்பில் அதிகபட்சமாக ஒபேத் மெக்காய், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 227 ரன்களை துரத்திய பார்படாஸ் 20 ஓவர்களில் கடுமையாக போராடியும் 138/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரிவல்டோ கிளார்க் 54* (43) ரன்கள் எடுக்க கயானா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளை சாய்த்தான். அதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கயானா வாழ்வா – சாவா போட்டியில் வென்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பாரபடஸ் பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

Advertisement