ஆசியக்கோப்பை : என்னை தூக்குனதும் நல்லது தான். வாய்ப்பு பறிக்கப்பட்டது குறித்து வாய்திறந்த – இஷான் கிஷன்

Ishan-Kishan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

ishan kishan

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் முன்னணி வீரர்கள் பலரும் இடம் பெற்று இருப்பதால் திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அந்த வகையில் ரோகித் சர்மாவின் தலைமையில் துவக்க வீரராக களம் இறங்கி வந்த இடதுகை துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு இந்த பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. டி20 கிரிக்கெட்டில் பொதுவாக அதிரடியாக விளையாடக்கூடிய இவர் சிறப்பான ஃபார்மில் இருந்தும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது சற்று வருத்தமான விடயம் தான்.

Ishan-3

இருந்தாலும் அணியில் ஏகப்பட்ட வீரர்கள் இருப்பதன் காரணமாக வேறு வழி இல்லாமல் அவர் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இருந்து தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள இஷான் கிஷன் கூறுகையில் : அணி தேர்வாளர்களது இந்த தேர்வு நியாயமானது தான் என நினைக்கிறேன். எப்பொழுதும் ஒரு அணியை தேர்வு செய்யும்போது தேர்வு குழுவினர் நிறைய யோசனைகளுக்கு பிறகு தான் முடிவினை எடுப்பார்கள்.

- Advertisement -

யாருக்கு? எங்கு? எப்போது வாய்ப்பு கொடுத்தால் அது சரியாக இருக்கும் என்று தேர்வு குழுவினருக்கு நன்றாக தெரியும். எனவே ஆசியக் கோப்பை தொடருக்கான அணியையும் அவர்கள் அந்த அடிப்படையில் தான் செய்து இருப்பார்கள். எனவே என்னை இந்த அணியில் தேர்வு செய்யாததில் வருத்தம் இல்லை. என்ன பொறுத்தவரை இது எனக்கு நல்லது தான்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : அங்கசுத்தி இங்கசுத்தி மீண்டும் பழையபடி அவரையே கேப்டனாக நியமித்த வங்கதேச அணி

ஏனென்றால் நான் அணியில் தேர்வாகாத போது தான் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் மீண்டும் நமது இடத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் வரும். எனவே மீண்டும் என் மீது, என் திறமை மீது தேர்வுக்குழுவினருக்கு நம்பிக்கை வரும் வரை சிறப்பாக விளையாடி அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement