ஆசியக்கோப்பை : அங்கசுத்தி இங்கசுத்தி மீண்டும் பழையபடி அவரையே கேப்டனாக நியமித்த வங்கதேச அணி

Ban
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. அதற்கு முன்பு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை தொடரானது வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகள் மோத இருக்கின்றன.

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் வங்கதேச அணி மட்டும் தங்களது அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ஆசியக் கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட வங்கதேச அணியை ஒரு வழியாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வந்த வங்கதேச அணி மீண்டும் தற்போது சற்று தொய்வை கண்டுள்ளது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு தற்போது புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முகமதுல்லா தலைமையில் விளையாடி வந்த வங்கதேச அணி சிறப்பாக விளையாடினாலும் முக்கிய தொடர்களில் பெரிய போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வந்தது. இதன் காரணமாக மீண்டும் வங்கதேச அணி பழையபடி அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான சாகிப் அல் ஹசனை கேப்டனாக தேர்வு செய்துள்ளது.

Shakib

அதுவும் பெட்டிங் தொடர்பான ஒரு நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த ஒப்பந்தத்தை கேன்சல் செய்தால் மட்டுமே அவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று கூறப்பட்ட வேளையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த ஒப்பந்தத்தை கேன்சல் செய்தார். இதன் காரணமாக தற்போது அணியில் இடம் பெற்றுள்ளது மட்டுமின்றி அவர் ஆசிய கோப்பை தொடர்கான கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதோடு இந்த ஆசிய கோப்பை மட்டுமின்றி எதிர்வரும் டி20 உலக கோப்பையிலும் சாகிப் அல் ஹசன் தான் கேப்டனாக செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளமையும், அனுபவமும் கலந்த வகையில் அந்த அணி கட்டமைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் ஆசிய கோப்பை தொடரில் கவனத்தை ஈர்க்கும் படியாக அவர்களது செயல்பாடு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன்படி ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி இதோ :

இதையும் படிங்க : தாதா சௌரவ் கங்குலியால் நெருங்கியும் தொடமுடியாமல் போன 3 முக்கிய சாதனைகளின் பட்டியல்

ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அனாமுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், அபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், முகமது சைபுதீன், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது, சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், எபடோட் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் எமன், நூருல் ஹசன் சோஹன் மற்றும் தஸ்கின் அகமது.

Advertisement