தாதா சௌரவ் கங்குலியால் நெருங்கியும் தொடமுடியாமல் போன 3 முக்கிய சாதனைகளின் பட்டியல்

Ganguly
Advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலி இந்தியா கண்ட மகத்தான கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். இந்தியா முழுவதிலும் இப்போதும் இருக்கும் அவரது தீவிரமான ரசிகர்கள் ஓய்வுக்குப்பின் 50 வயதை தொட்டுள்ள அவரின் ஆட்டத்தை பார்க்க முடியாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு வரப்பிரசாதமாக வரும் செப்டம்பர் 16இல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் லெஜெண்ட் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சவுரவ் கங்குலி கேப்டனாக இந்திய மகாராஜாஸ் அணியை வழிநடத்தி விளையாட உள்ளார். அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறும் அளவுக்கு 1992 – 2008 வரையிலான காலகட்டத்தில் அபாரமாக செயல்பட்ட அவர் வரலாற்றின் மிகச்சிறந்த ஜாம்பவானாக போற்றப்படுகிறார்.

Ganguly

கொல்கத்தாவின் இளவரசராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் எதிரணிகள் விடுக்கும் மிரட்டலுக்கு அஞ்சாமல் அவர்களையே மிரட்டும் வகையில் களத்தில் நடந்துகொண்ட தருணங்கள் ஏராளமாகும். அதனால் தாதா என்ற தைரியமான மனிதராக அறியப்படும் சௌரவ் கங்குலி வரலாற்றில் இந்தியா கண்டெடுத்த மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கிய பெருமைக்குரியவர். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை இறங்கி இறங்கி வந்து பளார் பளார் என்று பறக்கவிட்ட சிக்சர்களையும் அச்சுறுத்தலாக பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்களை அசால்ட்டாக ஆஃப் சைடில் தெறிக்கவிட்ட பவுண்டரிகளையும் ரசிகர்களால் மறக்க முடியாது.

- Advertisement -

தவறிப்போன சாதனைகள்:
சொல்லப்போனால் “காட் ஆஃப் சைட்” என்று போற்றும் அளவுக்கு தனக்கென்று ஒரு பேட்டிங் ஸ்டைலை வைத்திருந்த அவர் தனது கேரியரில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார். இருப்பினும் தனது அபார திறமையால் கடினமாக உழைத்து கிட்டத்தட்ட அருகில் நெருங்கியும் அவரால் தொட முடியாமல் போன 3 முக்கிய சாதனைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

Sourav Ganguly

3. 10000 ரன்கள்: 90களின் இறுதியில் இந்திய பேட்டிங் துறையின் மும்மூர்த்திகளாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரில் ஒருவராக இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றியவரான சௌரவ் கங்குலி ஒருநாள் கிரிக்கெட்டில் 22 சதங்கள் 72 அரை சதங்கள் உட்பட 11,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அப்படி 10000 ரன்களை ஒரு பேட்ஸ்மேன் அடித்திருந்தால் அவருக்கு தனி மரியாதையும் மதிப்புள்ளது என்று கூறலாம். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த கங்குலியால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த மாபெரும் மைல்கல்லை தொட முடியாமல் போய் விட்டது. இவருடன் விளையாடிய சச்சின், டிராவிட் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 10000+ ரன்கள் எடுத்த நிலையில் 188 இன்னிங்சில் 22 சதங்கள் 35 அரை சதங்கள் உட்பட 7212 ரன்களை எடுத்த கங்குலி 2005இல் கிரேக் சேப்பலுடன் ஏற்பட்ட மோதலால் அந்த வாய்ப்பை தவற விட்டார் எனக்கூறலாம்.

Ganguly

ஏனெனில் அதனால் தனது உச்சத்தில் இருக்கும் போது தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி அணிக்கு கம்பேக் கொடுத்த 2008இல் 54 என்ற சராசரியில் ரன்களை குவித்த போதிலும் திடீரென்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருவேளை அந்த நிகழ்வு ஏற்படாமல் இருந்திருந்தால் அவர் இருந்த பார்முக்கு நிச்சயம் மேலும் சிலவருடங்கள் விளையாடி 10000 டெஸ்ட் ரன்களை அடித்திருப்பார்.

- Advertisement -

2. 50 சராசரி: பொதுவாக பேட்ஸ்மேனின் தரத்தை அவருடைய பேட்டிங் சராசரியை வைத்தே கணக்கிடுவார்கள். அதிலும் 50க்கும் மேற்பட்ட சராசரியைக் கொண்டிருப்பவரையே சிறந்த பேட்ஸ்மென் என்று வல்லுனர்கள் அழைப்பார்கள். அந்த வகையில் சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படும் கங்குலி புள்ளி விவரங்கள் அடிப்படையில் 50 என்ற சராசரியை தொடவில்லை.

Ganguly

ஒருநாள் கிரிக்கெட்டில் 41.02 என்ற சராசரியைக் கொண்டுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 42.17 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். ஆரம்ப காலத்தில் தொடக்க வீரர் போன்ற டாப் ஆர்டர் இடத்தில் விளையாடிய அவர் கேப்டனாக பொறுப்பேற்றதும் அணியின் நலனுக்காக தனது இடத்தை வீரேந்திர சேவாக் போன்ற வீரர்களுக்கு விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த 50+ சராசரியை தொட்டிருக்க முடியும் என்று கூறலாம்.

- Advertisement -

1. உலகக்கோப்பை: பொதுவாக உலகக்கோப்பை வென்றதை பொறுத்தே ஒரு கேப்டன் மதிப்பிடப்படுவார். அந்த வகையில் 2000இல் சூதாட்ட புகாரில் சிக்கித் தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்று சேவாக் முதல் தோனி வரை தரமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்த சில வருடங்களிலேயே இந்தியாவை தலைநிமிர வைத்து வெற்றி நடை போட வைத்த கங்குலியால் உலக கோப்பையை மட்டும் வென்று கொடுக்க முடியவில்லை.

worldcup

ஆனால் அதற்கு தேவையான தரமான அணியை உருவாக்கிய அவரது தலைமையில் 2002-ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை மழையால் இலங்கையுடன் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்ட இந்தியா அதே வருடம் இங்கிலாந்தில் நடந்த நாட்-வெஸ்ட் முத்தரப்பு தொடரை வென்றது உச்சகட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகும் நிலையில் தமிழக வீரர் – வெளியான தகவல்

ஏனெனில் 2003இல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐசிசி உலகக் கோப்பையில் அவரது தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனை நெருங்கியபோது வழுவான ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் சொதப்பி தோற்றுப் போனதை இப்போது நினைத்தாலும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் நெஞ்சங்கள் உடைந்துவிடும். இருப்பினும் அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து தான் 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளை எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement