IND vs ZIM : காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகும் நிலையில் தமிழக வீரர் – வெளியான தகவல்

IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsZIM

- Advertisement -

இந்நிலையில் இதற்கிடையே இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சென்றடைந்தது.

இந்த ஒருநாள் தொடருக்கான போட்டிகளில் இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடம் பிடித்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதில் மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த பல மாதங்களாகவே தொடர் காயங்களால் அவதிப்பட்டு வரும் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரையும் காயம் காரணமாக தவறவிட்டார்.

Sundar-1

அதனை தொடர்ந்து மீண்டும் இந்திய அணிக்கு எப்படியாவது கம்பேக் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஐபிஎல் தொடரில் காயம் அடைந்து அடுத்தடுத்து பல தொடர்களை இழந்தார். இந்நிலையில் எப்படியோ ஒரு வழியாக இங்கிலாந்து சென்று கவுண்டி போட்டியில் விளையாடி மீண்டும் ஃபார்ம்க்கு வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சுந்தர் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டிருந்த வேளையில் தற்போது அவருக்கு மீண்டும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அது தவிர்த்து மற்றொரு காயமும் அவருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த ஜிம்பாப்வே தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி மாதிரி இல்ல, தன் வாழ்நாளில் பாபர் அசாம் எப்போதுமே பார்ம் அவுட்டாக மாட்டார் – முன்னாள் பாக் வீரர் உருட்டல் கருத்து

மிக இளம் வயதிலேயே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் டி20 போட்டிகளில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்த வேலையில் தற்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக காயம் காரணமாக தொடர்ச்சியாக அவர் அவதிப்பட்டு வருவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement