விராட் கோலி மாதிரி இல்ல, தன் வாழ்நாளில் பாபர் அசாம் எப்போதுமே பார்ம் அவுட்டாக மாட்டார் – முன்னாள் பாக் வீரர் உருட்டல் கருத்து

INDvsPAK
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் தனது அபார பேட்டிங் திறமையால் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசியுள்ள அவர் ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ளார். அதுபோக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு வந்த அவர் அந்த அத்தனை துறைகளிலும் அசத்தலாக செயல்பட்டதால் ஏற்பட்ட பணிச்சுமை கடந்த 3 வருடங்களாக சதத்தை அடிக்க முடியாத அளவுக்கு அவரின் கேரியரில் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kohli

- Advertisement -

அதனால் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்து இடையிடையே 40, 70 பொன்ற நல்ல ரன்களை எடுத்தாலும் அவரை அனைவரும் பார்ம் அவுட் என்றே கருதுகிறார்கள். அந்தளவுக்கு ஆரம்ப காலத்தில் அபாரமாக செயல்பட்டு தனக்கென்று தரத்தை உருவாக்கியுள்ள அவரை எத்தனை நாட்கள் சதமடிக்காமல் பெரிய பெயரை வைத்துக்கொண்டு அணியில் சுமராக விளையாடுவீர்கள் என கபில் தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சிக்கின்றனர். இருப்பினும் 70 சதங்களை அடித்து தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரராக நிரூபித்துள்ள அவருக்கு ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா போன்ற வெளிநாட்டு ஜாம்பவான்கள் ஆதரவு கொடுக்கின்றனர்.

தடுக்கமுடியாத பார்ம்-அவுட்:
உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் என்பது நிரந்தரமானது என்பதை உணர்ந்தே அவர்கள் இந்த ஆதரவு கொடுக்கின்றனர். மேலும் கிரிக்கெட்டில் விளையாடும் அத்தனை வீரர்களும் தங்களது வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் பார்மை இழ்ந்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்களும் பார்மை இழந்தபோது எப்போது ஓய்வு பெறுவார்கள் என்ற விமர்சனங்களை சந்தித்தனர்.

Virat Kohli Babar Azam

ஆனால் அதிலிருந்து அவர்கள் மீண்டெழுந்து முன்பைவிட அபாரமாக செயல்பட்டு சாதனைகள் படைத்து வெற்றிகரமாக விடைபெற்ற கதைகளும் உள்ளது. அந்த வகையில் விராட் கோலியும் ஃபார்முக்கு திரும்பி வெற்றி நடை போடுவர் என்பதே ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் விராட் கோலி பார்மை இழந்த 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் சக்கை போடு போட்டு அவரை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் தனது வாழ்நாளில் எப்போதும் பார்ம் அவுட்டாக மாட்டார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பார்ம் அவுட்டாக மாட்டார்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சிறந்த வீரர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். சிலர் பார்மை இழந்தால் அதிலிருந்து மீள முடியாமல் நீண்டகாலம் தவிப்பார்கள். ஆனால் பாபர் அசாம், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் போன்ற டெக்னிக்கல் அளவில் சிறந்த வீரர்கள் சுமாரான பார்மில் சிக்கினாலும் அதில் அவர்கள் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் பலவீனத்தை கண்டுபிடிப்பது கடினமாகும். அந்த வகையில் விராட் கோலி அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் எனும் பலவீனத்தில் சிக்கிவிட்டார். அதில் அவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் பலமுறை தாக்கியுள்ளார்”

Aakib Javed

“நேற்று அவர் பேட்டிங் செய்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் தற்போது அந்த பந்துகளை தூரத்திலிருந்து விளையாடாமல் இருக்க வேண்டுமென்று மனப்பூர்வமாக முயற்சிக்கிறார். நீங்கள் உங்களது டெக்னிக்கை மாற்றும் போது இந்த பிரச்சனைகள் உருவாகும். இதிலிருந்து வெளிவர பதற்றமடையாமல் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட அவர் முயற்சிக்க வேண்டும். அது மட்டுமே இந்த நீண்டகால தடுமாற்றத்திலிருந்து அவரை வெளியே வரவைக்க உதவும்” என்று கூறினார். அதாவது விராட் கோலியை விட பாபர் அசாம் டெக்னிக்கல் அளவில் சிறந்த வீரர் என்பதால் எப்போதுமே அவரைப் போன்ற பெரிய பார்ம் அவுட்டை சந்திக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இதிலிருந்து வெளிவர பதற்றமடையாமல் விளையாட வேண்டுமென்று கூறியுள்ள அவரின் இந்த கருத்தை இந்திய ரசிகர்கள் உருட்டலாகவே பார்க்கின்றனர். ஏனெனில் பகலானால் இரவு வரும் என்பது இயற்கையின் நியதியாக இருக்கும் நிலையில் பெரிய கேரியரில் விளையாடும் யாருமே பார்ம் அவுட்டாகாமல் விளையாட முடியாது என்பதே நிதர்சனமாகும்.

Babar

இதையும் படிங்க: 

இத்துடன் விரைவில் ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை பற்றி அவர் மேலும் பேசியது வருமாறு. “விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லையெனில் இந்தியா தோற்கும் என்ற நிலைமை உருவாகும். அப்போது ஏன் தீபக் ஹூடாவை அணியில் சேர்க்கவில்லை என்ற கேள்விகள் எழும். ஆனால் துபாய் மைதானங்கள் பார்மின்றி தவிக்கும் வீரர்கள் கூட பார்முக்கு திரும்ப உதவும்” என்று கூறினார்.

Advertisement