நான் செய்த அந்த தவறை நானே சரி பண்ணிட்டேன் – ஆட்டநாயகன் இஷான் கிஷன் மகிழ்ச்சி

Ishan
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணியிலும் தேர்வானார். இங்கிலாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமான அவர் அறிமுகப்போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் ஏற்கனவே அணியில் பல முன்னணி துவக்க வீரர்கள் இருந்ததனால் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போன அவர் தற்போது இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

ishan

- Advertisement -

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ராகுல் காயம் காரணமாக விலகவே ரோஹித்துடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கினார். மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பாக்கப்பட்ட வேளையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பெரிய அளவு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெறும் 71 ரன்களை மட்டுமே குவித்திருந்தார்.

இருப்பினும் அவரின் திறமை மீது இருந்த நம்பிக்கை காரணமாக அவருக்கு இந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் வாய்ப்பை அளித்த ரோஹித் அவரை நேற்றைய போட்டியிலும் துவக்க வீரராக களமிறக்கி விட்டார். அதன்படி நேற்று நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் வெளிப்படுத்தினார்.

ishan 1

மொத்தம் 56 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 89 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு நேற்று ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரிலிருந்து நான் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டேன். அந்த தொடர் முழுவதுமே நான் சரியான இன்டன்ட் உடன் விளையாடவில்லை.

- Advertisement -

அதேபோன்று பாசிட்டிவான கிரிக்கெட்டையும் நான் ஆடவில்லை எனப் புரிந்தது. எனவே இந்த தொடரில் நான் என்னுடைய மனநிலையை மிகவும் அமைதியாக வைத்துக் கொண்டேன். இயற்கையாக நான் அதிரடியாக விளையாடுவதுதான் எனக்கு செட்டாகும். அதோடு பாசிட்டிவாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்த போட்டியில் பந்துகளை பார்த்து அதிரடியாக விளையாடி ரன் அடித்ததில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : நாங்க இந்த 3 விஷயத்திலுமே தப்பு பண்ணிட்டோம். அதுவே தோல்விக்கு காரணம் – புலம்பிய இலங்கை கேப்டன்

எனக்கு எப்பொழுதுமே புல் ஷாட் ஆடுவது பிடித்தமான ஒன்று. அந்த வகை இந்த போட்டியில் நான் அதுபோன்ற ஷாட்டுகளை விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி. பயமின்றி பாசிட்டிவான கிரிக்கெட்டை விளையாடியதால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. அதேபோன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த போட்டியில் நாங்கள் பெரிய மைதானத்தில் இடையில் அடித்து ரன்களை எடுக்க பழகிக் கொண்டோம் என்றும் இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement