நாங்க இந்த 3 விஷயத்திலுமே தப்பு பண்ணிட்டோம். அதுவே தோல்விக்கு காரணம் – புலம்பிய இலங்கை கேப்டன்

Shanaka
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் இழந்த வேளையில் அடுத்த சில நாட்களிலேயே தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

INDvsSL

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 199 ரன்களைக் குவிக்க அடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

இதன் காரணமாக 62 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அந்த அணி சந்தித்தது. அதோடு 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா போட்டி முடிந்த பிறகு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் மூன்று விதமான துறைகளிலும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினோம். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என எதுவும் எங்களிடம் சரி இல்லை. இந்திய அணியை பொறுத்தவரை சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். இந்த போட்டியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மிகவும் அருமையாக விளையாடினார்கள்.

- Advertisement -

இந்த போட்டியில் நான் மேலும் சில ஓவர்களை வீசி இருக்கலாம் என்று நினைக்கிறேன். எங்கள் அணியில் 2 முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களை தவறவிட்டது ஒரு பின்னடைவாக மாறியுள்ளது. ஹஸரங்கா மற்றும் தீக்ஷனா ஆகியோர் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள். அவர்களுக்கு மாற்று வீரர்களாக இந்த போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு அந்த அளவு அனுபவம் கிடையாது.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் வெற்றிக்கு பிறகு – கேப்டன் ரோஹித் சர்மா பேசியது என்ன?

இருப்பினும் இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன் அசலங்கா ஒரு பாசிட்டிவான கிரிக்கெட்டை விளையாடினார். அவரது பேட்டிங் அருமையாக இருந்தது. இந்த பார்மை அவர் மீதமிருக்கும் போட்டிகளிலும் அப்படியே தொடருவார் என்று நினைக்கிறேன். பந்துவீச்சில் சமீரா சிறப்பாக செயல்பட்டார். அவர்தான் தற்போது எங்கள் அணியின் முதன்மை பந்து வீச்சாளராக இருக்கிறார் என்று தசுன் ஷனகா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement