இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் வெற்றிக்கு பிறகு – கேப்டன் ரோஹித் சர்மா பேசியது என்ன?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 89 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களை குவித்தனர்.

ishan

- Advertisement -

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

இஷான் கிஷன் நீண்ட நாட்களாக இந்த போன்ற ஒரு பெரிய இன்னிங்ஸ்க்காக தான் காத்திருந்தார். அவருடைய மனநிலை எனக்கு நன்றாக தெரியும். இது போன்ற ஒரு ஆட்டம் இன்று அவருக்கு இருப்பதையும் நான் புரிந்து கொண்டேன். அவர் இந்த இன்னிங்சை அழகாக கட்டமைத்தார். இந்த போட்டியில் மைதானம் மிகப்பெரியதாக இருந்ததால் நாங்கள் மைதானத்தின் இடைவெளியை சரியாக பயன்படுத்தி ரன்களை எடுத்தோம்.

- Advertisement -

ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு இந்த போட்டியில் ப்ரோமோஷன் கொடுக்க நினைத்தோம். அதன்படி இன்றைய போட்டியில் அவர் சற்று முன்கூட்டியே பேட்டிங் செய்ய வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஒரு பேட்ஸ்மேனாக நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறார்.

இதையும் படிங்க : புதிய உலகசாதனையை முதல் நபராக செய்து கெத்து காட்டிய இந்திய கேப்டன் – குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி உள்ள அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படுவார் என்றே இந்த ப்ரமோஷன்னைவழங்கினோம். இனிவரும் போட்டிகளிலும் அவரை நாங்கள் இதேபோன்று முன்னிலையில் ஆட வைக்க நினைக்கிறோம் என்று வெற்றி குறித்து ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement