IND vs WI : இந்தமுறை மிஸ் ஆயிடுச்சி.. ஆனா அடுத்தமுறை விடவே மாட்டேன் – சவால் விட்ட தொடர்நாயகன் இஷான் கிஷன்

Ishan-Kishan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் சமநிலை வகித்தனர். அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆனது நேற்று டிரினிடாட் நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களை குவித்தது. அதனைதொடர்ந்து 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 151 ரன்களுக்கு ஆல்அவுட்டானதால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 64 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 77 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி மட்டுமின்றி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலுமே அரைசதம் அடித்த இஷான் கிஷன் இந்த தொடரின் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டி முடிந்த பின்னர் இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில் : நான் இந்த போட்டியில் விளையாடிய விதம் குறித்து பெரிய அளவில் மகிழ்ச்சி அடையவில்லை.

ஏனெனில் நான் செட்டான பிறகு பெரிய ஸ்கோரை அடித்திருக்க வேண்டும். என்னுடைய சீனியர் வீரர்கள் என்னிடம் கூறுவதும் அதுதான். “ஒருமுறை நீ செட்டாகிவிட்டால் பெரிய ஸ்கோரை நோக்கி செல்ல வேண்டும்” என்று சொல்வார்கள். அந்த வகையில் நான் இந்த தொடர் முழுவதுமே நன்றாக செட் ஆகியிருந்தாலும் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனதில் வருத்தம்.

- Advertisement -

நிச்சயம் அடுத்த தொடரில் பெரிய ஸ்கோரை அடுக்க முயற்சிப்பேன். இதுபோன்ற உயர்தர அளவில் கிரிக்கெட் விளையாடும் போது நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம் என இஷான் கிஷன் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடுவது உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது. அவர் பந்தினை மிடில் பேட்டில் விளையாடுவதை பார்க்கும் போது எனக்கும் ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. அந்த அளவிற்கு அவர் சிறப்பாக விளையாடுகிறார்.

இதையும் படிங்க : IND vs WI : நான் நெனச்சது இந்த போட்டியில நடக்கலனாலும் ஜெயிச்சது ரொம்ப ஹேப்பி – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

அவருடன் எப்பொழுது இணைந்து விளையாடினாலும் மகிழ்ச்சி தான். அதேபோன்று அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை பற்றியெல்லாம் நான் யோசிக்க வில்லை என்றும் அடுத்தடுத்து வரும் தொடர்களில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து வருவதாக இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement