IND vs WI : நான் நெனச்சது இந்த போட்டியில நடக்கலனாலும் ஜெயிச்சது ரொம்ப ஹேப்பி – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் இஷான் கிஷன் 77 ரன்களையும், சுப்மன் கில் 85 ரன்களையும், சஞ்சு சாம்சன் 51 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 70 ரன்களையும் குவித்து அசத்தினர்.

அதனைத்தொடர்ந்து 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமின்றி இந்த தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 92 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் :

இந்த இன்னிங்ஸ் எனக்கு ஸ்பெஷலான ஒன்று. நான் இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாமல் போனது. இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. அதோடு துவக்கத்தில் பந்து நன்றாக பேட்டுக்கு வந்ததால் நல்ல ஷாட்களை விளையாட முடிந்தது.

- Advertisement -

ஆனால் பந்து சற்று பழையதாக ஆன பிறகு சற்று சவாலாக இருந்தது. கடந்த போட்டியின் போது நான் பெரிய அளவில் ரன்களை குவிக்காததால் இந்த போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன். இந்த போட்டியில் என்னுடைய பெஸ்ட்டை வழங்கியதாகவே நான் நினைக்கிறேன் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 350 டார்கெட்டை கூட அடிச்சிருக்க முடியும். ஆனா.. தோற்ற பிறகும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் – வினோதமான பேட்டி

இந்தியாவை தவிர்த்து வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சுப்மன் கில் சரியாக விளையாடுவதில்லை என்று ஒரு விமர்சனம் அவர்மீது இருந்துவரும் வேளையில் தற்போது நல்ல ஒரு இன்னிங்க்ஸை விளையாடி தனது திறனை அவர் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement