
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை குவித்தது.
பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் தற்போது சன் ரைசர்ஸ் அணியானது 5 போட்டிகளில் இரண்டாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் வெற்றி குறித்து பேசிய இஷான் கிஷன் அபிஷேக் சர்மா குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா எவ்வாறு விளையாடுவார்? என்பது அனைவருக்குமே தெரியும். இன்றைய போட்டியில் அவர் டக் அவுட்டானதால் அவருடைய ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் நாங்கள் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் இயல்பான ஆட்டமே அதிரடியாக விளையாடுவதுதான்.
போட்டி நாளன்று அவருடைய நாளாக இருந்தால் அணியின் ஸ்கோர் 240-250 வரை செல்லும். ஒரு சில போட்டிகள் இப்படியும் அவர் டக் அவுட்டாகலாம். எனவே அவரிடமிருந்து நாங்கள் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. அவர் எப்போதுமே ஒரே மாதிரி விளையாட வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம். அவர் எங்கள் அணிக்காக எப்போதுமே அதிரடியாக விளையாட வேண்டும் என இஷான் கிஷன் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் அறிமுகம் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்குள் தோனி வந்தால்.. பாவம் அந்த பையன் தான் வெளிய போவான் – பத்ரிநாத் கருத்து
அந்த வகையில் அவர் கூறியதாவது : உங்களிடம் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் எவ்வளவு ஆர்வமாகவும், உற்சாகமாகவும் விளையாடுவதற்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு தேவையான நேரத்தில் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். அந்த வகையில் எங்கள் அணியில் வாய்ப்புக்காக காத்திருந்த இருவருக்கு அவர்களுடைய சொந்த மைதானத்தில் வாய்ப்பு கொடுக்க நினைத்தோம். அந்த வகையிலே கிடைத்த வாய்ப்பில் அவர்களும் சாதித்தார்கள் என இஷான் கிஷன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.