ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பத்தாவது இடத்தை பிடித்த சி.எஸ்.கே அணி பெரிய சரிவை சந்தித்தது. அதன் காரணமாக பல இளம் வீரர்களை மினி ஏலத்தின் போது தேர்வுசெய்த சிஎஸ்கே அணி இம்முறை மிகச் சிறப்பான கம்பேக் கொடுக்கும் வகையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எம்.எஸ் தோனிக்கு பதிலாக வெளியேறப்போகும் வீரர் யார்? :
ஆனால் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் சென்னை அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் சிக்கித் தவிக்கிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி இந்த சரிவிலிருந்து மீண்டுவர வேண்டுமெனில் தோனி இடம்பெற வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த தொடரின் ஆரம்பத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக காயம் காரணமாக ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் முதல் நான்கு போட்டிகளை தவறவிட்ட தோனி மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வேண்டும் என்று பலரும் கூறிவரும் வேளையில் முன்னெச்சரிக்கை காரணமாக இன்றைய போட்டியிலும் அவர் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியிருந்தது.
ஒருவேளை அப்படி அவர் இந்த போட்டியில் விளையாடினால் அவருக்கு பதிலாக வெளியேறப்போகும் யார் வீரர் யார்? என்பது குறித்த சில கருத்துக்களும் இருந்து வருகிறது. அந்த வகையில் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான சுப்பிரமணியன் பத்ரிநாத் தோனி அணிக்குள் வந்தால் சர்பராஸ் கான் தான் வெளியேறுவார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி அணிக்கு திரும்புவாரா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
இதையும் படிங்க : சச்சினின் சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூட்டு போட்டு குடுக்கும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ
ஆனால் அவர் பேட்டிங் செய்ய துவங்கிவிட்டார். சி.எஸ்.கே அணி நிர்வாகத்திற்கே அவருடைய வருகை குறித்து உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை அவர் அணிக்கு திரும்பினால் அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் தான் வெளியேறுவார் வேறு வழியில்லை என சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.



