தோனி எப்படி அதை யோசிச்சார்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல – இஷான் கிஷன் வெளிப்படை

Ishan-Kishan
Advertisement

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு சரியான துவக்கம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்த ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற இக்கட்டான நிலையில் உள்ளது. மும்பை அணியின் இந்த சறுக்கலுக்கு பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளன.

MI Mumbai Indians

அந்த வகையில் ஏற்கனவே அணியில் இருந்த பல ஸ்டார் வீரர்களை மும்பை அணி வெளியேற்றியது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போன்று இந்த ஐபிஎல் தொடரில் மிக அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையைப் பெற்ற இஷான் கிஷன் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அவரிடமிருந்து இன்னும் பிரமாதமான ஆட்டம் வெளிவரவில்லை. இதன் காரணமாகவும் மும்பை சிரமத்தை சந்தித்து வருகிறது.

- Advertisement -

கடந்த 2014ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட இஷான் கிஷன் ஆரம்பகாலத்தில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர வைக்கப்பட்டு வந்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் அவரது கிரிக்கெட் கரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் அந்த தொடரில் 516 ரன்களை விளாசிய அவர் அதற்கு அடுத்த ஆண்டிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது துவக்க வீரராக விளையாடி வருகிறார். இன்றளவும் மும்பை அணியின் முன்னணி வீரராக விளையாடி வரும் அவர் இனிவரும் நாட்களிலும் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.

Ishan 1

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தோனியுடனான நினைவு குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எம்.எஸ் தோனி கீப்பிங் திறமையை விட அவரது மூளை எப்படி இயங்குகிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஏனெனில் ஒரு போட்டியில் நான் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அனைத்து பவுலர்களையும் நன்றாக அடித்துக் கொண்டிருந்தேன்.

- Advertisement -

ஆனால் அப்போது இம்ரான் தாகிர் இடம் சென்று தோனி அவரிடம் ஏதோ பேசிவிட்டு திரும்பி வந்தார். அப்போது தோனி தாஹீருக்கு அறிவுரை கொடுக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே இம்ரான் தாஹிர் எனக்கு அவுட் சைட் ஆப்பில் வீச நான் அதை டிரைவ் அடிக்க முயன்று ஷார்ட் தேர்டு மேனில் கேட்ச்சாகி ஆட்டமிழந்து வெளியேறினேன்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டிடம் இருந்து அந்த விடயத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் – மனம்திறந்த டேவிட் வார்னர்

ஸ்பின்னரை டிரைவ் அடிக்க சென்று ஷார்ட் தேர்டு மேன் திசையில் ஆட்டமிழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் எவ்வாறு அதனை சிந்தித்தார் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை தோனி அப்படிப்பட்ட மூளைக்காரர் என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement