ரிஷப் பண்ட்டிடம் இருந்து அந்த விடயத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் – மனம்திறந்த டேவிட் வார்னர்

David Warner DC
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார். குறிப்பாக இறுதிப் போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் அந்த உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியிருந்தார்.

David Warner

அதே வேளையில் அதற்கு முன்னதாக நடைபெற்று முடிந்த 14-ஆவது ஐபிஎல் தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி அவரின் கேப்டன் பதவியை பறித்தது மட்டுமின்றி அவரை சில போட்டிகளில் வெளியேவும் உட்கார வைத்து இருந்தது. இதன் காரணமாக வருத்தத்தில் இருந்த வார்னர் உலக கோப்பை தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அப்படி உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற அவர் மீது ஐபிஎல் ஏலத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. அதன்படி இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாட டேவிட் வார்னர் ஒப்பந்தமானார்.

David Warner Prithivi Shaw

ஆனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியதன் காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை தவறவிட்ட அவர் தற்போது டெல்லி அணியில் இணைந்து ப்ரித்வி ஷாவுடன் சேர்ந்து மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த இவர் தற்போது மீண்டும் டெல்லி அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இளம் கேப்டனான ரிஷப் பண்ட் இன் தலைமையின் கீழ் விளையாடுவது குறித்து பேசியுள்ள டேவிட் வார்னர் கூறுகையில் : இந்த இளம் வயதிலேயே இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்கும் ரிஷப் பண்ட் டெல்லி அணியை அற்புதமாக வழிநடத்தி வருகிறார். அவர் இனி வரும் சீசன்களில் இன்னும் சிறப்பாக தலைமைப்பண்பை கற்றுக் கொள்வார்.

இதையும் படிங்க : மிரட்டும் நம்ம யார்கர் கிங் நட்டு ! டி20 உலகக்கோப்பையில் இடம் உறுதி – காரணம் இதோ

அவருடன் இணைந்து இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன். குறிப்பாக அவர் ஒரு கையில் அடிக்கும் சிக்சர்களை அவரிடமிருந்து கற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளேன் என வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement