இதை மட்டும் செஞ்சா நீங்க தான் ராகுலுக்கு பதில் 2023 உ.கோ’யில் விளையாடுவீங்க – இளம் அதிரடி வீரருக்கு பிரட் லீ பாராட்டு அறிவுரை

Lee
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை தொடங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் புதிய அணியை உருவாக்கும் வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. இருப்பினும் 2023 உலகக்கோப்பையில் கடைசி வாய்ப்பாக மீண்டும் ரோகித் சர்மா தலைமையில் முதன்மை நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KL-Rahul

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மாவுடன் மற்றொரு தொடக்க வீரராக ராகுல் தான் களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது. ஆனால் 2019 வாக்கில் சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்த அவர் 17 கோடியாக எகிறிய தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக சமீப காலங்களில் சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்ட்ரைட் ரேட்டில் விளையாடி அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார். அதை விட ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்தால் பார்மை இழந்து திண்டாடும் அவர் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

பிரட் லீயின் அட்வைஸ்:
மேலும் நடைபெற்று முடிந்த வங்கதேச தொடரில் மொத்தமாக சொதப்பிய அவர் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து விளையாடி வருவது ரசிகர்களுக்கு கொந்தளிக்க வைத்துள்ளது. அதனால் அவரை வைத்துக் கொண்டு 2023 உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்று தெரிவிக்கும் ரசிகர்கள் வங்கதேசத்துக்கு எதிராக அதிவேகமாக இளம் வயதில் இரட்டை சதமடித்த உலக சாதனை படைத்த இசான் கிசான் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Ishan Kishan 1

இந்நிலையில் இரட்டை சதமடித்ததால் உலகக் கோப்பை வாய்ப்பை இஷான் கிசான் நெருங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ பாராட்டியுள்ளார். இருப்பினும் அதற்காக அதே நினைத்துக் கொண்டிருக்காமல் அடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ச்சியாக அதிரடியாக செயல்பட்டால் நிச்சயம் உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த இரட்டை சதத்தை வைத்து 2023 சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை இந்திய அணியில் விளையாடும் தகுதியைக் கொண்டுள்ளேன் என்று இஷான் கிசான் வலுவாக நிரூபித்துள்ளார். இருப்பினும் இது நடைபெறுமா? என்றால் எனக்கு தெரியாது. ஆனால் அது நடக்குமா? என்று கேட்டால் நிச்சயம் நடக்கும். ஏனெனில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமான இரட்டை சதமடித்துள்ளார். குறிப்பாக அடுத்த மாதங்களில் நடைபெறும் போட்டிகளில் நீங்கள் ஃபிட்டாக தொடர்ந்து அதிரடியாக ரன்களை குவித்தால் நிச்சயமாக உலகக்கோப்பையில் இந்தியாவின் ஓப்பனராக விளையாடும் வாய்ப்பை பெறுவீர்கள்”

Lee

“அவரும் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை தெளிவாக மனதில் வைத்து செயல்படுவார். இருப்பினும் ஒரு எச்சரிக்கை. இது போன்ற பாராட்டுக்கள் அவரது தலையில் சிலந்தி வலைகளை விரித்து விடும். எனவே அவருக்கு என்னுடைய அறிவுரை என்னவெனில் அந்த மைல்கல்லை மறந்து விடுங்கள். குறிப்பாக இரட்டை சதமடித்ததை முற்றிலும் மறந்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் அடைவதற்கு அதை விட பெரிய மைல்கல் மற்றும் சிகரங்கள் உள்ளன. எனவே இரட்டை சதத்தை மறந்து விட்டு அடுத்து வரும் செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்து தொடர்ந்து பெரிய ரன்களை அடித்துக் கொண்டே இருங்கள்”

இதையும் படிங்கமுன்பு இந்திய அணிக்காக அவர் என்ன செய்தாரோ இன்று அதை அஷ்வின் செய்கிறார் – பாராட்டிய தினேஷ் கார்த்திக்

“அந்த இன்னிங்ஸ் பற்றி தற்போது நான் தாமதமாக பாராட்டுகிறேன். இருப்பினும் அன்றைய நாளில் இசான் கிசான் விளையாடிய விதத்திற்கு வங்கதேசம் பதில் சொல்ல முடியாமல் திண்டாடியது. அவர் 132 பந்துகளில் 24 பவுண்டரிகள் 10 சிக்ஸருடன் 200 ரன்கள் குவித்து அதிவேகமான இரட்டை சதமடித்துள்ளார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்த அவரால் எளிதாக முச்சதத்தையும் அடித்திருக்க முடியும். அவருக்கு விராட் கோலி நல்ல உதவி செய்தார். மேலும் அவர் சதமடித்த போது எதிர்ப்புறம் விராட் கோலி கொண்டாடியது எனக்கு மிகவும் பிடித்தது” என்று கூறினார்.

Advertisement