முன்பு இந்திய அணிக்காக அவர் என்ன செய்தாரோ இன்று அதை அஷ்வின் செய்கிறார் – பாராட்டிய தினேஷ் கார்த்திக்

Dinesh Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் பங்காளதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனால் இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரின் தோல்விக்கு இந்திய அணி இந்த டெஸ்ட் டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் பழி தீர்த்து கொண்டது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பும் உயிர்ப்பித்துள்ளது.

Shreyas Iyer vs Ban

- Advertisement -

அதன்படி இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக தமிழக வீரர் அஷ்வின் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் பேட்டிங்கிலும் அணிக்கு தேவையான போது 2 ஆவது இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதன்காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதோடு அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் மாறினார். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடிய இன்னிங்சிற்கு பலரது மதத்தியிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் தினேஷ் கார்த்திக்கும் அவரை பாராட்டியுள்ளார்.

Ashwin

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக அணில் கும்ப்ளே திகழ்ந்து வந்தார். அவர் விளையாடிய போது எதிரணிகள் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட அவ்வளவு சிரமப்படுவார்கள். ஆனால் அவர் ஓய்வை அறிவித்த பிறகு அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரைப்போன்று எதிரணியை பயமுறுத்தும் வீரர் அணியில் இல்லாமல் இருந்தனர்.

- Advertisement -

ஆனால் அப்போது தான் அஷ்வின் மெல்ல மெல்ல வளரத்தொடங்கினார். இன்று அஷ்வின் முழுவதுமாக ஒரு மேட்ச் வின்னராக உருமாறி விஸ்வரூபம் எடுத்துள்ளார். அஷ்வின் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் இந்திய அணியை பெரும்பாலும் தாங்கி பிடிக்கிறார். இவ்வளவு விரைவாக அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : PAK vs NZ : அசத்தும் பாக், முஹமது யூசுஃபை முந்திய பாபர் அசாம் – ரிக்கி பாண்டிங் சாதனையும் தகர்த்து புதிய உலக சாதனை

அதேபோன்று கடந்த 5-6 ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற மகத்தான வெற்றிகளுக்கு பின்னால் அஷ்வினும் ஒரு முக்கிய காரணமாக உள்ளார் என்பதில் மகிழ்ச்சி. அன்று கும்ப்ளே இந்திய அணிக்காக செய்ததை இன்று அஷ்வின் நமது அணிக்காக செய்து வருவதாக தினேஷ் கார்த்திக் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement