இதெல்லாம் ஓவர்.. தெ.ஆ தொடரிலிருந்து விலகிய இஷான் கிசான்.. மாற்று வீரர் அறிவிப்பு

Ishan Kishan
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. அதைத் தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்திய அணி ஆரம்பத்திலே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இறுதியாக இந்த சுற்றுப்பயணத்தில் இவ்விரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் எப்படியாவது தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது. ஏனெனில் 1992 முதல் இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் இந்தியா ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்லாமல் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது.

- Advertisement -

விலகிய கிசான்:
இந்த சூழ்நிலையில் அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிலிருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிசான் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக தம்முடைய சொந்த காரணங்களுக்காக இஷான் கிசான் விலகுவதாக தெரிவித்துள்ள பிசிசிஐ அவருக்கு பதிலாக கேஎஸ் பாரத் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.

முன்னதாக நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடிய கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்த டெஸ்ட் தொடரிலும் கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் விரும்பினால் தாம் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக கேஎல் ராகுல் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதற்கு இந்திய அணி நிர்வாகமும் விருப்பம் தெரிவித்துள்ளதால் ராகுல் டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நமக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்பதால் இங்கே இருந்து என்ன செய்யப் போகிறோம் என்ற வகையில் இஷான் கிசான் சொந்த காரணங்களை சொல்லி இத்தொடரில் விலகியுள்ளது ரசிகர்களை கடுப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: கொத்தாக 5 விக்கெட்ஸ்.. ஆஸி, பாக், இலங்கையின் சாதனையை உடைத்த இந்தியா.. புதிய தனித்துவ உலக சாதனை

ஏனெனில் இந்திய அணியில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்காமல் நிறைய வீரர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலையில் இவர் இப்படி சொந்த காரணங்களை காட்டி விலகியுள்ளார். இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த பயிற்சி போட்டியில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎஸ் பரத் நாடு திரும்பாமல் அப்படியே ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணியுடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement