கொத்தாக 5 விக்கெட்ஸ்.. ஆஸி, பாக், இலங்கையின் சாதனையை உடைத்த இந்தியா.. புதிய தனித்துவ உலக சாதனை

Shami Arshdeep Singh
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை சமன் செய்த இந்திய அணி அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 17ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 116 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஆண்டிலோ பெலுக்வியோ 33 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 117 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக போட்டியிலேயே 55*, ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் எடுத்து மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியாவின் சாதனை:
இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அர்ஷிதீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்தார்.

அதை விட அவர் எடுத்த 5 விக்கட்டுகளையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பவுலர்கள் மொத்தம் 8 முறை ஒரு போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் முகமது ஷமி மட்டும் 2 முறை 5 விக்கெட்களை எடுத்ததை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

- Advertisement -

அதே போல 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்திருந்தார். அந்த வகையில் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட காலண்டர் வருடத்தில் அதிக முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த அணி என்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கையின் சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 8*, 2023
2. ஆஸ்திரேலியா : 6, 2004
3. பாகிஸ்தான் : 6, 1990
4. இலங்கை : 2008

இதையும் படிங்க: முதல் பந்திலேயே தெரிஞ்சிபோச்சி.. அதுல இருந்து மீண்டு வரமுடில.. தோல்விக்கு பிறகு – இந்திய அணியை பாராட்டிய மார்க்ரம்

அப்படி சமீப காலங்களாகவே பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். அதனால் இந்தியாவின் பவுலிங் உலகத்தரம் வாய்ந்ததாக முன்னேறியுள்ளதாக சமீபத்தில் பாராட்டிய சோயப் அக்தர் இனிமேல் இந்தியர்கள் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக இந்திய பவுலர்களையும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement