முதல் பந்திலேயே தெரிஞ்சிபோச்சி.. அதுல இருந்து மீண்டு வரமுடில.. தோல்விக்கு பிறகு – இந்திய அணியை பாராட்டிய மார்க்ரம்

Markram
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அசத்தினர். பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சாய் சுதர்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டி மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. டாசில் நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் முதலில் விளையாடி நிறைய ரன்களை குவிக்க நினைத்தோம். ஆனால் முதல் பந்தில் இருந்தே பேட்டிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் 6-7 ஓவர்களிலேயே நாங்கள் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்ததால் அந்த இடத்தில் இருந்து மீண்டு வரவே இயலவில்லை.

இதையும் படிங்க : குறிச்சு வெச்சுக்கோங்க.. இந்த பையன் அதை சாதிப்பாரு.. சாய் சுதர்சனக்கு தமிழக லெஜெண்ட் அஸ்வின் பாராட்டு

சற்று நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்று இருக்க முடியும். ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தில் தள்ளினர். இருப்பினும் இந்த போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்தடுத்த திட்டங்களை தீட்டி வெற்றி பாதைக்கு திரும்புவோம் என மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement