குறிச்சு வெச்சுக்கோங்க.. இந்த பையன் அதை சாதிப்பாரு.. சாய் சுதர்சனுக்கு தமிழக லெஜெண்ட் அஸ்வின் பாராட்டு

ravichandran ashwin
- Advertisement -

ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்தப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட முதல் முறையாக தேர்வான தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் தொடரிலேயே விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெற்றார்.

அந்த வாய்ப்பில் தென்னாபிரிக்கா நிர்ணயித்த 117 ரன்களை சேசிங் செய்யும் போது முதல் பந்திலேயே பவுண்டரியை அடித்து தம்முடைய கேரியரை அட்டகாசமாக துவங்கிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 9 பவுண்டரியுடன் 55* ரன்கள் குவித்து இந்தியா எளிதாக வெற்றி பெற உதவியினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

குறிச்சு வைங்க:
தமிழகத்தின் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தேர்வான அவர் கடந்த சீசனில் சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ரன்கள் குவித்து சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றார். அதனால் இந்தியா ஏ அணிக்காக தேர்வான அவர் 2023 இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதை தொடர்ந்து இராணி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியாவுக்காக அறிமுகமாகியுள்ள அவர் முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தியுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் பையன் எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அசத்துவார் என்று தாம் சொன்னதை சாய் சுதர்சன் இன்று நிரூபித்துள்ளதாக தமிழகத்தின் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தம்முடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மொழி எனும் தமிழ் திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர் சொன்னது போல் சாய் சுதர்சன் பற்றி இதை நான் தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பையன் பல இடங்களுக்கு செல்வார். 2021 டிஎன்பிஎல் தொடரில் அறிமுகமானது முதல் அவர் பின்னே திரும்பி பார்க்காமல் செயல்பட்டு வருகிறார்”

இதையும் படிங்க: 2018க்குப்பின் நின்ற ஹாட்ரிக் தோல்விகள்.. பிங்க் ஜெர்ஸியுடன் வந்த தெ.ஆ அணிக்கு பரிதாபத்தை கொடுத்த இந்தியா

“டிஎன்பிஎல், ரஞ்சிக் கோப்பை, ஐபிஎல், கவுண்டி தொடர், இந்தியா ஏ அணிகளுக்காக அசத்திய அவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டின் அறிமுக போட்டியிலும் அசத்தியுள்ளார். இப்படியே வெற்றிகளை சேசிங் செய் மை பாய்” என்று கூறியுள்ளார். முன்னதாக தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக அசத்தப்போகும் அடுத்த வீரராக சாய் சுதர்சன் இருப்பார் என்று இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே அஸ்வின் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement