ராகுலை மிஞ்சிய இளம் வீரர் – டி20 கிரிக்கெட்டில் புதிய தடவல் நாயகனாக மோசமான சாதனை, கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்று உலகில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோற்றது. அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியா இத்தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜனவரி 29ஆம் தேதியன்று லக்னோவில் நடைபெற்ற 2வது போட்டியில் கடுமையாக போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பேட்டிங்க்கு சவாலாக இருந்த அந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்திய பவுலர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 99/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சாட்னர் 19* (23) ரன்கள் எடுத்த நிலையில் இந்திய சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 100 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 11, இஷான் கிசான் 19, ராகுல் திரிபாதி 13 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அப்போது களமிறங்கிய சூரியகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்ட முடியாமல் தடுமாறும் அளவுக்கு லக்னோ மைதானம் சவாலை கொடுத்த நிலையில் இடையே வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

தடவல் நாயகன்:
இருப்பினும் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 15* (20) ரன்களும் கடைசி வரை அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய சூரியகுமார் யாதவ் 26* (31) ரன்கள் எடுத்ததால் தப்பிய இந்தியா 19.5 ஓவரில் 101/4 ரன்கள் எடுத்து 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. அப்படி பவுலிங்க்கு சாதகமாக இருந்த இந்த மைதானத்தில் 100 ரன்களை துரத்தும் போது அடித்த நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய இசான் கிசான் ரொம்பவே மெதுவாக விளையாடினார்.

ஆனால் மிடில் ஆர்டரில் அழுத்தமான நேரத்தில் களமிறங்கி 31 பந்துகளை எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் கூட கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்று 26 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். ஆனால் இவர் 32 பந்துகளை எதிர்கொண்டு நங்கூரமாக நன்கு செட்டிலாகி பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை நன்றாக அறிந்தும் பொறுப்புடன் விளையாடாமல் 19 ரன்களை 59.37 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தபட்சம் 30 பந்துகளை எதிர்கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் மிகவும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்துள்ள இஷான் கிசான் புதிய மோசமான சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 59.37, நியூசிலாந்துக்கு எதிராக, 2023
2. இஷான் கிசான் : 83.33, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2022
3. கேஎல் ராகுல் : 91.07, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2022
4. கேஎல் ராகுல் : 92.30, ஹாங்காங்க்கு எதிராக, ஆசிய கோப்பை, 2022

இந்த வேளையில் போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் பேட்டிங்க்கு சவாலாக இருந்த நிலையில் இஷான் கிசானை மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள் என்று சிலர் கேட்கலாம். ஆனால் கடைசியாக அவர் விளையாடிய 13 டி20 போட்டிகளில் முறையே 27 (26), 15 (7), 26 (11), 3 (5), 8 (10), 11 (13), 36 (31), 10 (11), 37 (29), 2 (5), 1 (2), 4 (5), 19 (32) என ஒரு அரை சதம் கூட அடிக்காமல் வெறும் 199 ரன்களை 15.30 என்ற மோசமான சராசரியில் 106.41 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதிலிருந்து இந்த போட்டி மட்டுமல்லாமல் பெரும்பாலான டி20 போட்டிகளில் இவர் தடவலாக செயல்படுவது அம்பலமாகிறது. முன்னதாக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் சுயநல எண்ணத்துடன் தடவலாக செயல்பட்டு 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்த ராகுலுக்கு பதிலாக கடந்த மாதம் வங்கதேச ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்ததால் இஷான் கிசான் வாய்ப்பு பெற்றார்.

இதையும் படிங்க: IND vs NZ : வீரர்களை விட அதிகமாக விளையாடிய லக்னோ மைதானம் – டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனை படைத்த 2வது போட்டி

ஆனால் ராகுலை மிஞ்சி படுமோசமாக செயல்பட்டு மோசமான சாதனையும் படைத்துள்ள இவர் இந்தியாவின் புதிய தடவல் நாயகனாக உருவெடுத்துள்ளார். அதனால் கடுப்பாகும் ரசிகர்கள் இவருக்கு பதில் பிரிதிவி ஷா’க்கு வாய்ப்பு கொடுக்குமாறு சமூக வலைதளங்களில் கொந்தளிக்கிறார்கள்.

Advertisement