IND vs NZ : வீரர்களை விட அதிகமாக விளையாடிய லக்னோ மைதானம் – டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனை படைத்த 2வது போட்டி

IND vs NZ Hardik Pandya
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்று ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்த நிலைமையில் ஜனவரி 29ஆம் தேதியன்று லக்னோவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து சுழலுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் 20 ஓவர்களில் 99/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சாட்னர் 19* (23) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

IND-vs-NZ

- Advertisement -

அதை தொடர்ந்து 100 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 11 (9), இஷான் கிசான் 19 (32), ராகுல் திரிபாதி 13 (18) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான போது களமிறங்கிய சூரியகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய நிலையில் இடையே வாஷிங்டன் சுந்தர் 10 (9) ரன்னில் ரன் அவுட்டானார்.

விளையாடிய லக்னோ மைதானம்:
அதனால் கடைசி ஓவர் வரை சென்ற இப்போட்டியில் சூர்யகுமார் 26* (31) ரன்களையும் ஹர்திக் பாண்டியா 15* (20) ரன்களும் எடுத்ததால் தப்பிய இந்தியா 19.5 ஓவரில் கடுமையாக போராடி 101/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் இப்போட்டியில் இரு அணி வீரர்களை விட லக்னோ பிட்ச் அதிகமாக விளையாடியது என்று சொல்ல வேண்டும்.

Hardik Pandya IND vs NZ

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு கடினமாக பிட்ச் இருந்தாலும் பவர் பிளே ஓவர்களில் எதோ ஒரு அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி விடுவார்கள். ஆனால் இப்போட்டியில் ஃபின் ஆலன் 11 (10), டேவோன் கான்வே 11 (14), கிளன் பிலிப்ஸ் 5 (10), டார்ல் மிட்சேல் 8 (13), மைக்கேல் பிரேஸ்வேல் 14 (22) என நியூசிலாந்தின் பெரும்பாலான அதிரடி பேட்ஸ்மேன்கள் 100 ஸ்டிரைக் ரேட்டை தாண்ட முடியாத அளவுக்கு லக்னோ மைதானம் சவாலை கொடுத்தது.

- Advertisement -

சரி இந்திய பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணில் அசத்துவார்கள் என்று பார்த்தால் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் 100க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் தான் ரன்கள் எடுத்தனர். குறிப்பாக களமிறங்கிய முதல் பந்திலிருந்தே தாம் நினைத்தாலும் தம்மை கட்டுப்படுத்த முடியாமல் அடித்து நொறுக்கக்கூடிய சூரியகுமார் யாதவ் மொத்தமாக 180+ ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ள தனது கேரியரில் முதல் முறையாக 31 பந்துகளை எதிர் கொண்டும் 100 ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டவில்லை.

Lucknow cricket Stadium

அதை விட மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணியிலிருந்து எந்த அதிரடி வீரர்களாலும் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை. குறிப்பாக வெறும் 100 ரன்களை துரத்துவதற்கு இந்தியா 19.5 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. மொத்தத்தில் இந்த போட்டியில் 239 பந்துகள் வீசப்பட்டும் ஒரு சிக்சர்கள் கூட அடிக்கப்படவில்லை. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக பந்துகள் வீசப்பட்டும் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாத போட்டி என்ற வித்தியாசமான உலக சாதனையை நேற்றைய இந்தியா – நியூஸிலாந்து போட்டி படைத்துள்ளது.

- Advertisement -

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடந்த 2007 முதல் இந்திய மண்ணில் டி20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. அத்துடன் இந்திய மண்ணில் ஒரு டி20 போட்டியில் மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட் இந்த போட்டியில் தான் பதிவாகியுள்ளது. அந்த பட்டியல்:
1. 5.02 – இந்தியா : நியூசிலாந்துக்கு எதிராக, லக்னோ, 2023
2. 5.21 – இந்தியா, இலங்கைக்கு எதிராக, விசாகப்பட்டினம், 2016

Lucknow-stadium

அது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஸ்பின்னர்கள் அதிக பந்துகளை வீசிய போட்டியாகவும் இப்போட்டி உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 179 : இந்தியா – நியூஸிலாந்து, லக்னோ, 2023*
2. 168 : வங்கதேசம் – பாகிஸ்தான், தாக்கா, 2011
3. 156 : ஆஸ்திரேலியா – பாகிஸ்தான், கொழும்பு, 2012

இதையும் படிங்க: IND vs NZ : சாத்தியமா நான் பண்ணது தப்புதான். அதை நானே ஒத்துக்குறேன் – ஆட்டநாயகன் சூரியகுமார் பேட்டி

ஆனால் இதற்கு முன் இங்கு நடைபெற்ற 5 டி20 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்ற நிலையில் எவ்வளவு சவால்கள் வந்தாலும் அதற்கு வளைந்து கொடுக்காத இந்தியா முதல் முறையாக வெற்றிகரமாக சேசிங் செய்து லக்னோ மைதானத்தில் புதிய சரித்திரமும் படைத்துள்ளது.

Advertisement