தோனி மற்றும் ரிஷப் பண்டை கடந்து மாஸ் சாதனையை நிகழ்த்திய இஷான் கிஷன் – என்ன தெரியுமா?

kishan
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் நேற்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்த இலங்கையை இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசன் ஆகியோர் கூட்டாக இணைந்து வெளுத்து வாங்கினார்கள்.

INDvsSL

- Advertisement -

முதல் ஓவர் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களை கதற கதற அடித்த இந்த ஜோடி ஆரம்பம் முதலே பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்டது. இதில் ஒருபுறம் ரோகித் சர்மா நிதானத்துடன் பேட்டிங் செய்ய மறுபுறம் பயமில்லா பேட்டிங்கை வெளிப்படுத்திய இசான் கிசன் சரமாரியாக பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து இலங்கை பவுலர்கள் மிரட்டிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

இந்தியா சூப்பர் வெற்றி:
இதில் ரோகித் சர்மா 44 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து பட்டைய கிளப்பிய இஷான் கிசான் 56 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட அரைசதம் விளாசி 89 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்ட இலங்கை பவுலர்களை போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் வெளுத்து வாங்கி வெறும் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட அரைசதம் அடித்து 57* ரன்கள் அடித்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் இந்தியா 199/3 ரன்களை எடுத்ததால் 200 என்ற பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணி வீரர்கள் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரம்பத்திலேயே தடுமாறினார்கள். அந்த அணிக்கு அதிகபட்சமாக அரைசதம் அடித்து 53* ரன்கள் குவித்து சரித் அசலங்கா வெற்றிக்காக போராடிய போதிலும் கேப்டன் சனாகா, சண்டிமால் உள்ளிட்ட இதர முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 137/6 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

இஷான் கிசான் புதிய சாதனை:
இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்த போட்டியில் 56 பந்துகளில் 89 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Ishan

இந்நிலையில் இந்தப் போட்டியில் 89 ரன்கள் விளாசிய அவர் சர்வதேச டி20 வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற ரிஷப் பண்ட் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர்களின் பட்டியல் இதோ:
1. இஷான் கிஷான் : 89 ரன்கள், இலங்கைக்கு எதிராக, லக்னோ, 2022*
2. ரிஷப் பண்ட் : 65 ரன்கள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2019.
3. எம்எஸ் தோனி : 56 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, பெங்களூரு, 2017.

- Advertisement -

இந்தியா புதிய சாதனை:
அத்துடன் இந்த வெற்றியின் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இந்தியா தோற்றது.

indvswi

அதன்பின் ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த 3 வெற்றிகளை விராட் கோலி தலைமையிலான இந்தியா பதிவு செய்தது. அதன்பின் கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த 3 டி20 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றிருந்தது.

- Advertisement -

இப்படி 9 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வந்த இந்தியா நேற்றைய வெற்றியுடன் 10வது வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளது. இப்படி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளை பெறுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் இதன் வாயிலாக சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்து இந்தியா புதிய சாதனையும் செய்துள்ளது.

இதையும் படிங்க : வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவை எச்சரித்த ரோஹித் சர்மா – எதுக்குன்னு பாருங்க

.

Advertisement