வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவை எச்சரித்த ரோஹித் சர்மா – எதுக்குன்னு பாருங்க

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 89 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களை குவித்தனர்.

INDvsSL

- Advertisement -

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

இஷான் கிஷன் நீண்ட நாட்களாக இந்த போன்ற ஒரு பெரிய இன்னிங்ஸ்க்காக தான் காத்திருந்தார். அவருடைய மனநிலை எனக்கு நன்றாக தெரியும். இது போன்ற ஒரு ஆட்டம் இன்று அவருக்கு இருப்பதையும் நான் புரிந்து கொண்டேன். அவர் இந்த இன்னிங்சை அழகாக கட்டமைத்தார். இந்த போட்டியில் மைதானம் மிகப்பெரியதாக இருந்ததால் நாங்கள் மைதானத்தின் இடைவெளியை சரியாக பயன்படுத்தி ரன்களை எடுத்தோம்.

- Advertisement -

ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு இந்த போட்டியில் ப்ரோமோஷன் கொடுக்க நினைத்தோம். அதன்படி இன்றைய போட்டியில் அவர் சற்று முன்கூட்டியே பேட்டிங் செய்ய வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஒரு பேட்ஸ்மேனாக நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறார் என்று ரோஹித் கூறினார்.

இதையும் படிங்க : விராட் கோலி இல்லாத கேப்பில் மெகா உலகசாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா! – என்ன தெரியுமா?

மேலும் இந்திய அணி இந்த போட்டியில் பீல்டிங்கில் செயல்பட்ட விதம் குறித்து பேசிய ரோகித் கூறுகையில் : இன்றைய போட்டியில் பல எளிய கேட்ச்களை வீரர்கள் தவறவிட்டு உள்ளனர். நிச்சயம் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் இன்னும் நிறைய வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது. இது போன்ற போட்டிகளில் எளிதாக கிடைக்கும் கேட்ச் வாய்ப்புகளை நழுவ விடுவது அணிக்கு பாதகமாக அமையலாம். அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் நமக்கு மிகச் சிறந்த பீல்டிங் டீம் தேவை எனவே அதற்கான வேலையை பயிற்சியாளர்கள் குழு மேற்கொள்ள வேண்டும் என்று ரோஹித் எச்சரிக்கும் தொனியில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement