பாண்டியாவுடன் சேர்க்கை.. இந்தியாவுக்கு விளையாட ராகுல் டிராவிட் சொல்லை மதிக்காத இஷான் கிசான்

IShan Kishan 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடும் கேஎஸ் பரத் கீப்பிங் செய்வதில் நன்றாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் அசத்தவில்லை. எனவே அவரை நீக்கி விட்டு இசான் கிசானை கொண்டு வரலாம் என்று இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது.

ஆனால் கடத்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொன்ன இசான் கிசான் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐயிடம் கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

- Advertisement -

மதிக்காத இஷான்:
அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதலிண்டு போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பொய் சொல்லிவிட்டு நன்னடத்தையின்றி நடந்து கொண்ட காரணத்தாலேயே இஷான் கிசான் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இருப்பினும் அதை மறுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிசான் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் ராகுல் டிராவிட் கேட்டுக் கொண்டிருந்தார். அதனால் ராகுல் டிராவிட் பேச்சைக் கேட்டு இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக இசான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் பிப்ரவரி 9ஆம் தேதி ஹரியானாவுக்கு எதிராக ஜம்சேத்பூர் நகரில் துவங்கும் ரஞ்சிக் கோப்பை போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்ட் அணிக்கு விளையாட இசான் கிசான் எந்த விருப்பத்தையும் காட்டவில்லை. குறிப்பாக ரஞ்சித் கோப்பையில் விளையாடுவதற்காக ஜார்கண்ட் அணியில் இணையாத அவர் அதற்கு நேர்மாறாக குஜராத்துக்கு சென்று அங்குள்ள கிரண் மோர் அகாடமியில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: நன்றி மறக்காத தல தோனி.. 2004 ஹேர் ஸ்டைல்.. புதிய பேட் ஸ்பான்ஸர் ஸ்டிக்கரின் பின்னணி இதோ

அங்கே ஏற்கனவே ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அவர்களுடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை எடுக்கும் இசான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கான ஆர்வத்தை காட்டவில்லை. அந்த வகையில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு தயாராக இருக்கும் போது ராகுல் டிராவிட் பேச்சைக் கேட்காமல் இசான் கிசான் இப்படி நடந்து கொள்வது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement