IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டியில் இஷான் கிஷன் எந்த இடத்தில் களமிறங்குவார்? – வெளியான அறிவிப்பு

Ishan-Kishan
- Advertisement -

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை சென்றுள்ள இந்திய அணியானது இந்த தொடரில் தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் 2-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி எப்போதும் பெறும் வரவேற்பை விட இம்முறை கூடுதலான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் தசைப் பிடிப்பு காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாடுவது உறுதி ஆகிவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் அப்படி இந்திய அணிக்குள் வரும் இஷான் கிஷன் எந்த இடத்தில் விளையாடுவார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அறிக்கையின் படி : இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்திலே விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் ஆலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் இந்திய அணியின் பின் வரிசை பேட்ஸ்மேன்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடனே இணைந்து இஷான் கிஷன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அணி நிர்வாகம் அவரை மிடில் ஆர்டரில் களமிறக்கவே விரும்புவதாக தெரிகிறது.

- Advertisement -

மேலும் அவர் பயிற்சி மேற்கொண்ட ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா என பின்வரிசை பேட்ஸ்மேன்களுடனே பயிற்சியினை மேற்கொண்டு உள்ளதால் இஷான் கிஷன் ஐந்தாவது இடத்திலேயே களம் இறங்குவார் என்று உறுதியாக கூறப்படுகிறது. இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது இடத்தில் களமிறங்காத அவர் இம்முறை ஐந்தாவது இடத்தில் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நம்ம டீமுக்கு அவர் வந்துட்டாரு இல்ல. இனி பாருங்க ஆட்டத்தை. உலககோப்பையை குறி வைத்து – டிராவிட் அளித்த பேட்டி

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் ஆறு போட்டியில் விளையாடியுள்ள அவர் 106 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதேவேளையில் நான்காவது இடத்தில் வழக்கமாக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் 20 போட்டிகளில் 805 ரன்கள் குவித்து நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதால் அவரது இடத்தை மாற்ற முடியாது என்பதாலும் ஐந்தாவது வீரராக இஷான் கிஷன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

Advertisement