ஆசியக்கோப்பை அணியில் தேர்வுசெய்யப்படாத ஆதங்கத்தில் இஷான் கிஷன் – வெளியிட்ட பதிவு

Ishan-3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் முன்னணி வீரர்கள் பலரும் இடம் பெற்று இருப்பதால் திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மாவின் தலைமையில் துவக்க வீரராக களம் இறங்கி வந்த இடதுகை துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு இந்த பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. டி20 கிரிக்கெட்டில் பொதுவாக அதிரடியாக விளையாடக்கூடிய இவர் சிறப்பான ஃபார்மில் இருந்தும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது சற்று வருத்தமான விடயம் தான்.

இருந்தாலும் அணியில் ஏகப்பட்ட வீரர்கள் இருப்பதன் காரணமாக வேறு வழி இல்லாமல் அவர் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இருந்து தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து தனது instagram story மூலம் சில குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் பகிர்ந்த அந்த பதிவில் : ஒரு விஷயம் வலியை கொடுக்கிறது என்பதற்காக அதற்கு ஏற்றார் போல் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். யாராவது உங்களை பூ ஆக கருதினால் நீங்கள் நெருப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்/ அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தெ.ஆ மற்றும் துபாய் டி20 தொடரில் தங்களது புதிய அணிகளின் பெயரை அறிவித்த மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா நிர்வாகங்கள் – லிஸ்ட் இதோ

24 வயதான இஷான் கிஷன் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 t20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement