IPL 2023 : ருதுராஜ் கூட பரவால்ல, உ.கோ சான்ஸ் கிடைக்க நீங்க ஐபிஎல் தொடரில் கண்டிப்பா அடிக்கணும் – இளம் வீரரை எச்சரித்த சேவாக்

Sehwag
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31 முதல் துவங்கி பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் களமிறங்கும் 10 அணிகளில் விளையாடும் ஏராளமான இளம் கிரிக்கெட் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் முனைப்புடன் களமிறங்க தயாராகி வருகிறார்கள். அந்த வரிசையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இடது கை இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிசான் இந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் 2020, 2021 சீசனில் மும்பை அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் தன்னுடைய முதல் டி20 போட்டியிலேயே அரை சதமடித்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார். ஆனால் 2022 சீசனில் 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு தக்கவைக்கப்பட்டதால் நிச்சயம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாகி தடுமாறிய அவர் மோசமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

சேவாக் ஏமாற்றம்:
அதனால் விமர்சனங்களை சந்தித்தாலும் 2022 ஜூலை மற்றும் அக்டோபர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் அடித்து நொறுக்கி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.

ruturaj

அதன் காரணமாக கேஎல் ராகுல் போன்றவருக்கு பதிலாக மாற்று வீரர் கிடைத்து விட்டார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அதன் பின் நடந்த நியூஸிலாந்து டி20 தொடரின் 3 போட்டிகளிலும் சொதப்பிய அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஏமாற்றத்தை கொடுத்தார். இந்நிலையில் இரட்டை சதமடித்த போட்டிக்கு பின் வாய்ப்பு பெற்ற எந்த போட்டியிலும் அரை சதம் கூட அடிக்காமல் திணறும் இஷான் கிசான் தமக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர் சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 2021 சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினாலும் 2022 சீசனில் சோடை போன மற்றொரு இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் விட இஷான் கிசான் சுமாராக செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே 2023 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

sehwag

“ஆரம்பத்தில் ருதுராஜ் கைக்வாட் தான் நல்ல திறமை இருந்தும் சிறப்பாக செயல்படாத வீரராக இருப்பதாக நான் நினைத்தேன். ஆனால் நாளடைவில் இந்திய அணியில் கிடைத்த நல்ல வாய்ப்புகளில் இஷான் கிசான் தான் ரன்களை அடிக்காமல் இருந்து வருகிறார். எனவே அவர் இந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு தனக்குத்தானே இலக்கு நிர்ணயித்து முயற்சிக்க வேண்டும். அப்போது தான் 50 ஒவ்வொரு உலககோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். அது நடைபெற்றால் அவருக்கு டி20 அணியில் விளையாடும் வாய்ப்பு தாமாகவே கிடைக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:பால் குடிக்கும் குழந்தை போன்ற வீரர்களை வெச்சு தோனி, விராட், ரோஹித் அடங்கிய இந்தியாவை செஞ்சோம் – சர்பராஸ் அதிரடி பேட்டி

அவர் கூறுவது போல சமீப காலங்களில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் உலகக் கோப்பையில் கேஎல் ராகுல், ஷிகர் தவான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க தகுதியானவராக தன்னை நிரூபித்து வருகிறார். எனவே குறைந்தபட்சம் உலகக்கோப்பைக்கான உத்தேச இந்திய அணியிலாவது இடம் பிடிக்க 2023 ஐபிஎல் தொடரில் இசான் கிசான் தனது திறமைகளை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

Advertisement