IND vs PAK : சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்திய 2 இளம் புலிகள், சவாலான ஸ்கோரை – நிர்ணயித்தது எப்படி?

IND vs PAK
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கையின் பல்லக்கல்லே நகரில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு எதிர்பார்க்கப்பட்டது போலவே நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை 11 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கி அடுத்ததாக வந்த முதுகெலும்பு வீரர் விராட் கோலியை 4 ரன்களில் அவுட்டாக்கி பாகிஸ்தானுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தார்.

அந்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கி காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரை 14 (9) ரன்களில் அவுட்டாக்கிய ஹரிஷ் ரவூப் மறுபுறம் தடுமாறிய சுப்மன் கில்லையும் 10 ரன்களில் அவுட்டாக்கி மேலும் தெறிக்க விட்டார். அதனால் 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியா 150 ரன்கள் தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினர்.

- Advertisement -

போராட்ட ஸ்கோர்:
அதில் பொதுவாகவே தொடக்க வீரராக களமிறங்கும் இசான் கிசான் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடியதால் தடுமாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் நிலைமையை சமாளித்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதற்கு ஹர்திக் பாண்டியா எதிர்புறம் உதவியதை பயன்படுத்திய அவர் அரை சதமடித்து 3வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தியதால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 82 (81) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார்.

அவருக்கு நிகராக மறுபுறம் அதிரடியாக விளையாடிய பாண்டியாவும் பாகிஸ்தானுக்கு சவாலாக நின்று அசத்தினார். அதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரும் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 87 (90) ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்த போதிலும் இந்தியாவை காப்பாற்றி பெருமையுடன் பெவிலியன் திரும்பினார். அதே ஓவரிலேயே மறுபுறம் ஃபினிஷிங் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இறுதியில் பும்ரா 16 ரன்கள் எடுத்த போதிலும் 50 ஓவர்கள் வரை தாக்குப் பிடிக்க முடியாத இந்தியா 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும் ஹரிஷ் ரவூப், நசீமா ஷா தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியாவை தலைக்குனியும் மோசமான படைக்க வைத்த டாப் ஆர்டர் – 2023 உ.கோ நினைத்து ரசிகர்கள் கவலை

ஆனாலும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் இழந்து திண்டாடியதால் 200 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 267 என்ற மிகச் சிறப்பான இலக்கை நிர்ணயித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இந்த மைதானம் ஓரளவு பவுலிங் சாதகமாக இருப்பதால் இந்திய பவுலர்கள் சிறப்பாக போராடும் பட்சத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்றே சொல்லலாம்.

Advertisement