ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியாவை தலைக்குனியும் மோசமான படைக்க வைத்த டாப் ஆர்டர் – 2023 உ.கோ நினைத்து ரசிகர்கள் கவலை

Shaheen Afridi IND vs PAK
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. அதில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தையும் பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் மழை லேசாக வந்து சென்ற நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவை 5வது ஓவரின் கடைசி பந்தில் 11 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய ஷாஹீன் அப்ரிடி அடுத்த ஓவரிலேயே அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 4 ரன்களில் காலி செய்தார்.

அதனால் மோசமான துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவை காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் 14 ரன்களில் தம்முடைய மிரட்டல் வேகத்தில் காலி செய்த ஹரிஷ் ரவூப் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு இளம் தொடக்க வீரர் சுப்மன் கில்லையும் 11 (22) ரன்களில் போல்ட்டாக்கினார். அதனால் 66/4 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவை இளம் வீரர் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடி வருகிறார்கள்.

- Advertisement -

மோசமான சாதனை:
முன்னதாக உலகிலேயே தற்சமயத்தில் தரமான பவுலர்களை கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றி காண முடியும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். குறிப்பாக 2021 டி20 உலகக்கோப்பை போல இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து ரோகித், கில் போன்ற வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என நிறைய எச்சரிக்கையான கருத்துக்களும் காணப்பட்டன.

அதனால் சுதாரிப்புடன் செயல்பட வேண்டிய இந்திய பேட்ஸ்மேன்கள் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையில் பாகிஸ்தான் பவுலர்களின் லைனை தவறாக கணித்து தங்களுடைய விக்கெட்டை தாரை பார்த்து பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதிலும் குறிப்பாக முதல் 3 இடங்களில் களமிறங்கிய ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகிய 3 பேட்ஸ்மேன்களுமே கொஞ்சம் கூட மாறாமல் வரிசையாக கிளீன் போல்டானார்கள். இப்படி வாயிலாக ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்ட்டானது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

இதற்கு முன் கடைசியாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களும் க்ளீன் போல்ட்டானார்கள். ஆனால் ஆசிய கோப்பையில் இப்படி கிளீன் போல்ட்டாவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: IND vs PAK : தல தோனியின் 12 வருட தனித்துவ சாதனையை சமன் செய்து பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய – இஷான் கிஷன்

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக, 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக, 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திண்டாடியதே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் அதில் கொஞ்சம் கூட இந்திய பேட்ஸ்மேன்கள் முன்னேறவில்லை என்பது மீண்டும் தற்போது அம்பலமானதால் 2023 உலக கோப்பை வெற்றியை நினைத்து இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement