கிட்டத்தட்ட அழும் நிலைக்கு சென்ற இஷான் கிஷன். தோளில் தட்டி தேற்றிய விராட் கோலி – என்ன நடந்தது ?

Ishan-kishan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 39-ஆவது லீக் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 165 ரன்களை குவிக்க அடுத்ததாக 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 18.3 ஓவரில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது.

chahal

- Advertisement -

ஆனால் மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. ஏற்கனவே மும்பை அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற வேளையில் தற்போது மூன்றாவது போட்டியிலும் தோல்வி அடைந்தது அந்த அணி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை அணியின் முக்கிய வீரர்களான இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இந்த தொடரில் மோசமாக விளையாடி வருவது அந்த அணிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இஷான் கிஷன் சரியாக விளையாடாதது அவர் மனநிலையை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த அவர் அதிகபட்ச சிக்ஸர்களையும் விளாசி இருந்தார். இப்படி ஒரு வேலையில் சமீபத்தில் இந்திய அணிக்காக அறிமுகமான இஷான் கிஷன் தொடர்ந்து சிறப்பாக விளையாட அவருக்கு டி20 உலக கோப்பையில் விளையாடும் பெரிய வாய்ப்பும் கிடைத்தது.

Ishan-3

இந்நிலையில் தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் போட்டியில் மும்பை அணி தோற்றதை நினைத்தும், தன்னுடைய மோசமான பார்ம் குறித்தும் கலங்கிய நிலையில் இருந்த இஷான் கிஷனை நோக்கி பெங்களூர் அணியின் கேப்டனும், இந்திய கேப்டனுமான விராட் கோலி ஆறுதல் சொல்ல சென்றார்.

- Advertisement -

அப்போது தன்னை மீறி கட்டுப்படுத்த முடியாமல் அழும் அளவிற்கு இஷான் கிஷன் சென்றார். தனது மோசமான பேட்டிங் பார்ம் காரணமாகவே அவர் இதுபோன்று சோகமாக இருந்ததாக தெரிகிறது. இருப்பினும் விராட் கோலி அவரை தேற்றும் விதமாக தோளின் மீது கையை போட்டு அவருக்கு நம்பிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி குறித்து பி.சி.சி.ஐ-யிடம் போட்டு கொடுத்தது இந்த சீனியர் வீரர் தானாம் – வெளியான பரபரப்பு தகவல்

மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்படி அவர் விளையாடி வருவது இந்த சோகமான மனநிலைக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இஷான் கிஷன் உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று நாம் நம்பலாம்.

Advertisement