விராட் கோலி குறித்து பி.சி.சி.ஐ-யிடம் போட்டு கொடுத்தது இந்த சீனியர் வீரர் தானாம் – வெளியான பரபரப்பு தகவல்

BCCI
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரோடு தனது டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் பலரும் அவரது இந்த முடிவு குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தான் பணிச்சுமை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அதனையும் தனக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி மற்றும் ரோஹித் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும் கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.

Kohli

- Advertisement -

ஆனால் கோலி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னரே பிசிசிஐ-யிடம் இந்திய வீரர் ஒருவர் தனிப்பட்ட முறையில் கோலியின் நடத்தைகள் குறித்து குற்றம்சாட்டி இருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதன்படி கோலி யார் பேச்சையும் கேட்காமல் நடக்கிறார் என்றும் பயிற்சியின்போது பயிற்சியாளர்கள் ஏதாவது மாற்றத்தை சொன்னால் கூட என்னை குழப்பாமல் சென்று விடுங்கள் என்று நேரடியாக அவர்களை அசிங்கப்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

மேலும் யாருடைய பேச்சையும் கேட்காமல் செயல்படுவதால் அணி தேர்விலும் தவறு ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டி இருந்ததாக தகவல்கள் வெளியாகியது. அப்படி பி.சி.சி.ஐ-யிடம் கோலி குறித்து புகார் செல்லவே அவர் பதவி விலக அழுத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதற்கு முன்னதாக கோலி தானாக முன்வந்து டி20 கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.

Kohli

இந்நிலையில் அப்படி விராட் கோலி மீது பிசிசிஐ-யிடம் புகார் கொடுத்த அந்த வீரர் யார் என்ற கேள்வி பல நாட்களாகவே இருந்து வந்தது. இந்நிலையில் அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக இந்திய அணியின் சீனியர் வீரரான தமிழக வீரர் அஸ்வின் தான் பி.சி.சி.ஐ-யிடம் இதுகுறித்து புகார் அளித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Ashwin

அதன்படி கோலியின் மீது புகார் அளித்த அஸ்வின் கோலியின் செயல்பாட்டால் தனக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்று தோன்றுவதாகவும், மீண்டும் தான் அணியில் இடம் பெற மாட்டேன் என்ற அச்சமும் இருப்பதாக பி.சி.சி.ஐ-யிடம் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் விளையாடி நான்கு ஆண்டுகளாகிறது. கோலி பதவியேற்றதிலிருந்து அஸ்வினுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இதையும் படிங்க : நேற்றைய போட்டியில் பங்கேற்க முடியாதது உருக்கமான கருத்தை வெளியிட்ட வார்னர் – ரசிகர்கள் ஆதரவு

ஆனால் தற்போது டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பான பார்மில் இருந்தும் இங்கிலாந்து தொடரில் அவரை விளையாட விடாமல் ஒதுக்கிய கோலி மீண்டும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்க மாட்டார் என்ற ஒரு அச்சத்தினால் பிசிசிஐ-யிடம் அஸ்வின் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படி இருப்பினும் விராட் கோலி குறித்த வதந்தி மற்றும் சர்ச்சை தற்போது அதிகளவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement