நேற்றைய போட்டியில் பங்கேற்க முடியாதது உருக்கமான கருத்தை வெளியிட்ட வார்னர் – ரசிகர்கள் ஆதரவு

Warner
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் கடந்த பல ஆண்டுகளாகவே சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வென்ற போது கேப்டனாகவும் இருந்தவர். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 500 ரன்களுக்கு மேல் தொடர்ச்சியாக குவிக்கும் டேவிட் வார்னர் கடந்த சில தொடர்களாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக நடப்பு ஆண்டில் முதலாவது பாதியில் இந்தியாவில் நடைபெற்ற தொடரில் ரன் குவிக்க தடுமாறினார். அதனால் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு வில்லியம்சன் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

Williamson

- Advertisement -

அப்போதே ரசிகர்கள் இதுகுறித்து பெரிதளவு வருத்தம் அடைந்தனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் நடைபெற்ற சில போட்டிகளிலும் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம அமீரகத்தில் நடைபெற்று வரும் வேளையிலும் சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் வார்னருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த தொடர் முழுவதுமே 195 ரன்கள் மட்டுமே அவர் குவித்து உள்ளதால் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் நேற்றைய போட்டியில் களமிறங்கினார். ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கினை சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் சேசிங் செய்ய அவரது ஆட்டம் முக்கியமானதாக அமைந்தது. நேற்றைய போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் குவித்து தனது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

roy

இந்நிலையில் ஃபார்ம் அவுட் காரணமாக வெளியேற்றப்பட்ட வார்னருக்கு பதிலாக களமிறங்கிய ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி உள்ளதால் இனிவரும் போட்டிகளிலும் வார்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க வார்னருக்கு ஆதரவாக ரசிகர்களின் குரல் தற்போது சமூக வலைதளத்தில் பெருகிவருகின்றன.

- Advertisement -

comment

மேலும் தான் விளையாடாதது குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த வார்னர் : “இன்றைய போட்டியில் எதிர்பாராத விதமாக என்னால் விளையாட முடியாமல் போனது” ஆனால் உங்களது ஆதரவு எனக்கு கண்டிப்பாக தேவை, ப்ளீஸ் சப்போர்ட் செய்யுங்கள் என்று அவர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவாகவும், அவரை ஆதரிக்கும் வகையிலும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அவன் மெதுவா தான் ஆடப்போறான். பயம் இருக்கும் – தோனி விக்கெட்டை வீழ்த்த தமிழில் டிப்ஸ் கொடுத்த கார்த்திக்

நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக சீனியர் வீரர்களான வார்னர், கேதார் ஜாதவ், மணிஷ் பாண்டே ஆகியோர் நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்படி ஒரு நிலையில் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக சேசிங் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement