அவன் மெதுவா தான் ஆடப்போறான். பயம் இருக்கும் – தோனி விக்கெட்டை வீழ்த்த தமிழில் டிப்ஸ் கொடுத்தாரா கார்த்திக்? (ஸ்டம்ப் மைக் பதிவு)

Varun
- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சென்னை அணி இம்முறை பலமாக திரும்பி வந்துள்ளது. இந்த நடப்பு 14வது ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 8 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் குவித்த நிலையில் அடுத்ததாக விளையாடிய சென்னை அணி சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து தோனி, ராயுடு, ரெய்னா ஆகியோரது விக்கெட்டை இழந்தது. பின்னர் இறுதி நேரத்தில் ஜடேஜாவின் அதிரடி காரணமாக இறுதியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இருப்பினும் இந்த தொடர் முழுவதுமே தோனியின் ஆட்டம் பேட்டிங்கில் மிகவும் மோசமாக உள்ளது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த முக்கியமான போட்டியில் கூட தோனி பேட்டிங் செய்ய வந்தபோது பெரிதளவு அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை எதிர்கொள்ள தோனி மிகவும் சிரமப்பட்டார்.

இறுதியில் மூன்று பந்துகளை சந்தித்த அவர் ஒரு ரன் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இந்த விக்கெட்டுக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதன்படி தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தியை நோக்கி கூறியதாவது : “அவன் மெதுவாதான் ஆடப்போறான்”, “உன்னை அடிக்க போறதில்ல”, “பயம் இருக்கும்” என்று தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தியிடம் பேசிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நான் பயத்துல போயி ஒளிஞ்சிகிட்டேன். ஆனா தோனி ரொம்ப கூலா இருந்தாரு – கெய்க்வாட் பகிர்வு

இந்த வீடியோ இணையத்தில் பரவியதும் பலரும் இது தோனி களத்திலிருந்த போது நடைபெற்றது என நினைத்தனர். ஆனால் உண்மையில் நடந்தது யாதெனில் தோனி ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் சாம் கரன் வருணின் பந்துவீச்சை எதிர்கொள்வார். அப்போது சாம் கரன் பேட்டிங் செய்கையில் தான் தினேஷ் கார்த்திக் இந்த வார்த்தைகளை பேசுவார். ஆனால் அப்போது தோனியின் விக்கெட் ரீபிளே வந்ததனால் அனைவரும் தோனியை தான் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டனர். ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் சாம் கரனுக்காக கார்த்திக் சொன்னவை என்பதே உண்மை. இந்த வாய்ஸ் ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement