நான் பயத்துல போயி ஒளிஞ்சிகிட்டேன். ஆனா தோனி ரொம்ப கூலா இருந்தாரு – கெய்க்வாட் பகிர்வு

Ruturaj
- Advertisement -

அபுதாபியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முக்கியமான ஒரு போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தது.

deepak

டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களையும் குவித்து அசத்தலான துவக்கத்தை அளித்திருந்தனர். இருந்தபோதிலும் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தோனி, ரெய்னா, ராயுடு ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஒரு கட்டத்தில் சென்னை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் போது 26 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தது.

- Advertisement -

அப்போது களத்தில் இருந்த ஜடேஜா பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரி என அந்த ஓவரில் 22 ரன்களை சேர்த்தார். பின்னர் கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சாம் கரனும், 5வது பந்தில் ஜடேஜாவும் ஆட்டமிழக்க 20வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து தீபக் சாஹர் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

jadeja 1

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இந்த போட்டியின் கடைசி ஓவரின் போது எனக்கு மிகவும் பதட்டம் ஏற்பட்டது. எப்படியாவது அணி வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டத்தில் நான் போட்டியை பார்க்க சற்று பயந்தேன்.

- Advertisement -

csk

அதிலும் குறிப்பாக கடைசி ஓவரின் போது நான் நேரடியாக போட்டியை பார்க்க பயந்து எங்கள் அணியில் உள்ள வீரர் ஒருவரின் பின்னால் சென்று மறைந்து கொண்டேன். அந்த அளவிற்கு எனக்கு கடைசி பந்து வரை போட்டி செல்ல செல்ல பதட்டமாகவே இருந்தது. ஆனால் கேப்டன் தோனி எப்போதும் போல கூலாக அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணாமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய – கொல்கத்தா வீரர்

இதுபோன்ற பெரிய இலக்கை துரத்தும்போது சரியான துவக்கம் தேவை. அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தது மகிழ்ச்சிதான் என்றும் போட்டியின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற பிறகே நான் இயல்பான நிலைக்கு திரும்பினேன் என்றும் ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement