முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணாமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய – கொல்கத்தா வீரர்

Kkr
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது முதற்கட்டமாக இருபத்தி ஒன்பது போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் இரண்டாவது கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.

IPL

- Advertisement -

இந்த தொடரில் தற்போது அனைத்து அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்று வருவதால் இன்னும் சுவாரஸ்யமாக மாறி வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்ற கொல்கத்தா அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய வீரருமான ஒருவர் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி முழங்காலில் ஏற்பட்டுள்ள அவரது காயம் குணமடைய 4 முதல் 6 மாதங்கள் தேவைப்படும் என்றும் பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஆம் குல்தீப் யாதவிற்கு முழங்காலில் மிகப் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா அணியில் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

kuldeep

எனவே நிச்சயம் அவர் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்றும் 4 மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை அவர் காயம் குணமடைய தேவைப்படும் என்பதால் அவர் இந்தியா திரும்புவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

kuldeep

மேலும் விரைவில் நாடு திரும்பவுள்ள குல்தீப் யாதவ் மும்பையில் முழங்கால் காயத்திற்கான சிகிச்சையை மேற்கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் சிறப்பாக விளையாடிய குல்தீப் யாதவ் கடந்த சில ஆண்டுகளாகவே வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

இதையும் படிங்க : இவங்க 3 பேரும் இப்படி ஆடுனா ? டி20 வேர்ல்டு கப் கனவு என்ன ஆகுறது ? – கலகத்தில் பி.சி.சி.ஐ

இப்படி ஒருவேளையில் குல்தீப் யாதவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு வெளியேறியுள்ளது அவருக்கு நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பது உறுதி.

Advertisement