இவங்க 3 பேரும் இப்படி ஆடுனா ? டி20 வேர்ல்டு கப் கனவு என்ன ஆகுறது ? – கலகத்தில் பி.சி.சி.ஐ

IND
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் மோதின. ஐபிஎல் தொடரின் 39-ஆவது லீக் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் பெங்களூரு கேப்டனாக விராட் கோலி மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்திய அணியின் கேப்டனாக அவர் வெற்றியை ரசிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

chahal

- Advertisement -

ஏனெனில் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வான வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது பி.சி.சி.ஐ கலக்கத்தில் உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் நேற்றைய போட்டியில் விளையாடிய இந்திய அணியில் தேர்வான வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 10 ரன்களை கூட அடிக்கவில்லை அதேபோன்று பவுலிங்கில் ராகுல் சாகர் 33 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இப்படி இவர்கள் செயல்படும் பட்சத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியின் போது எவ்வாறு செயல் படுவார்கள் ? என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட துவக்க வீரர் தவான் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் யுஸ்வேந்திர சாஹல் தற்போது சிறப்பாக பந்துவீசி பார்முக்கு வந்துள்ளார். இதன் காரணமாக வீரர்களை தேர்வு செய்ததில் தவறு செய்துவிட்டோமோ ? என்று பிசிசிஐ யோசிப்பதில் தவறு இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : நல்ல டேலன்ட் பிளேயர் தான். ஆனா மூளையை யூஸ் பண்ணி விளையாட மாட்றாரு – சேவாக் வெளிப்படை

இருப்பினும் அடுத்த மாதம் வரை போட்டிக்கு நேரம் இருப்பதால் நிச்சயம் இந்த அணியில் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஒரு சில வீரர்கள் மாற்றப்பட்டாலும் அதில் ஆச்சர்யம் இல்லை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement