நல்ல டேலன்ட் பிளேயர் தான். ஆனா மூளையை யூஸ் பண்ணி விளையாட மாட்றாரு – சேவாக் வெளிப்படை

virender sehwag
- Advertisement -

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியானது சிறப்பாக செயல்பட்டு 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியின் வலுவான பவுலிங் லைனை எதிர்த்து பெங்களூர் அணியை சேர்ந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார். மொத்தம் 37 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என விரைவாக 56 ரன்கள் சேர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நல்ல ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றார்.

maxwell

கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 165 ரன்களை குவிக்க அடுத்ததாக 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பேட்டிங்கில் விரைவாக 56 ரன்கள் குவித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் மேக்ஸ்வெல் கலக்கலாக செயல்பட்டிருந்தார். நேற்றைய போட்டியில் 4 ஓவர் வீசிய அவர் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு அவரை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில் : மேக்ஸ்வெல் ஒரு நல்ல டேலன்ட்டான பிளேயர் தான். ஆனால் சில நேரங்களில் அவர் தனது மூளையை சரிவர பயன்படுத்தாமல் போகிறார். நேற்றைய போட்டியில் அவர் சிறப்பாக தனது மூளையை பயன்படுத்தி உள்ளதால் நிறைய ரன்களையும் அடித்தார். அதுமட்டுமின்றி விக்கெட்டுகளையும் எடுத்தார். நான் எப்போதும் அவருக்கு எதிரானவன் அல்ல. அவருடைய விளையாட்டுக்குத்தான் நான் என்னுடைய கருத்தினை கூறுகிறேன்.

maxwell 1

மேக்ஸ்வெல் ஒரு அருமையான பிளேயர். சில சமயம் அவர் சூழ்நிலையை அறிந்து மூளையை உபயோகித்து சிறப்பாக விளையாடினால் நிச்சயம் அவரால் தனி ஒருவராக அணிக்கு வெற்றியை தேடித் தர முடியும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : மேக்ஸ்வெல் ஒரு தொடரில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தால் அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும்.

- Advertisement -

maxwell 2

ஏனெனில் வருடா வருடம் பல கோடிக்கு ஏலம் போகும் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அவர் அதனை உணர்ந்து சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் அவரிடம் உள்ளது. ஆர்சிபி அணிக்காக மேக்ஸ்வல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா அணியில் இருந்து இவரை எப்படி ஓரங்கட்டினாங்கனு எனக்கு புரியல – கேள்வியெழுப்பிய சேவாக்

கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணியில் இருந்த மேக்ஸ்வெல் சென்ற ஏலத்தில் பெரிய தொகைக்கு பெங்களூர் அணியில் இணைந்தார். அதன்படி தற்போது நடைபெற்று வரும் நடப்பு சீசனில் 9 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் 300 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 3 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement