இந்தியா அணியில் இருந்து இவரை எப்படி ஓரங்கட்டினாங்கனு எனக்கு புரியல – கேள்வியெழுப்பிய சேவாக்

Sehwag

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்த பெங்களூர் அணியானது நேற்று மும்பை அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் திகழ்ந்தார்.

chahal

இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூர் அணிக்கு பெரிதளவு கைகொடுத்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது 165 ரன்கள் குவிக்க அடுத்ததாக 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

- Advertisement -

ஆனால் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களில் சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் 111 ரன்களை மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பையில் சாஹலை ஏன் சேர்க்கவில்லை ? என்பது போன்று சேவாக் தற்போது கேள்வி எழுப்பி உள்ளார்.

Chahal

இதுகுறித்து அவர் கூறுகையில் : சாஹல் இந்த ஐபிஎல் மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். என்னை பொறுத்தவரை அவர் டி20 உலகக்கோப்பை அணியில் விளையாடி இருக்கவேண்டும். ஆனால் அவரை ஏன் வெளியேற்றினார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ராகுல் சாகர் தற்போது தான் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

- Advertisement -

ஆனால் சாஹல் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். அதுமட்டுமின்றி நிறைய போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். நிச்சயம் டி20 போன்ற பெரிய தொடர்களில் அவரது இடம் முக்கியமானதாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நேற்றைய போட்டி குறித்து பேசிய சேவாக் கூறுகையில் : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கூட சரியான நேரத்தில் விக்கெட்டை எடுத்தார். அதுமட்டுமின்றி ரன்களையும் கட்டுக்குள் வைத்திருந்தார்.

இதையும் பாருங்க : சி.எஸ்.கே அணி ஜெயிச்சிட்டே தான் இருக்காங்க. ஆனா அவங்ககிட்ட இந்த வீக்னஸ் மட்டும் மாறல – லாரா பேட்டி

எனவே நிச்சயம் அவர் இன்னும் சிறப்பாக எதிர்வரும் போட்டிகளில் விளையாட முடியும் என்று சேவாக் கூறியுள்ளார். டி20 போட்டியில் இதுவரை இந்திய அணிக்காக 49 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 63 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement