சி.எஸ்.கே அணி ஜெயிச்சிட்டே தான் இருக்காங்க. ஆனா அவங்ககிட்ட இந்த வீக்னஸ் மட்டும் மாறல – லாரா பேட்டி

Lara
- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது பாதியின் முதல் மூன்று போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

deepak

- Advertisement -

இதன் காரணமாக தற்போது 16 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டுடன் சி.எஸ்.கே அணியானது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கூட சென்னை அணி 171 ரன்னை போட்டியின் கடைசி பந்தில் அபாரமாக சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் என்னதான் சென்னை அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்தாலும் சி.எஸ்.கே அணியில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன என்று வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் கேப்டனான பிரைன் லாரா தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ruturaj

சென்னை அணி இந்த சீசனில் நன்றாகத்தான் விளையாடி வருகிறது. இருந்தாலும் அவர்களிடம் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை மற்ற அணிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் அந்த அணியின் குறை எங்கு உள்ளது ? யார் யாரெல்லாம் சரியாக விளையாடவில்லை ? என்று நான் வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும் நீங்களாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Faf-1

மேலும் இந்த இரண்டாம் பாதியில் மும்பை அணிக்கு எதிராக முதல் போட்டியில் சென்னை அணி விளையாடும் போது போட்டியின் துவக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் மும்பை அணி அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டது என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ இந்திய அணியில் இவங்க 2 பேருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கனும் – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி

அவர் கூறியதன்படி பார்க்கையில் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சற்று தடுமாறி வருவதாகவும், துவக்கம் சரியில்லை என்றால் நிச்சயம் மிடில் ஆர்டரில் அவர்களால் சோபிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் சென்னை அணியின் பலவீனமாக மிடில் ஆர்டரே இருக்கும் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement