டி20 உ.கோ இந்திய அணியில் இவங்க 2 பேருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கனும் – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி

Prasad
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் இம்மாத துவக்கத்தில் இந்த தொடருக்கான தங்களது அணியை அறிவித்தது. அதில் தமிழக வீரர்களான அஷ்வின் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது.

cup

- Advertisement -

அதேபோன்று தோனியும் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் பெரிதளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ முன்னாள் தேர்வுக் குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் இந்திய அணியில் இரண்டு வீரர்களை தேர்வு செய்யாமல் விட்டது தவறு என்றும் அவர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு விளையாட தகுதியானவர்கள் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

தற்போது உள்ள t20 இந்திய அணியில் சிறப்பாக விளையாடக் கூடியவர் ஷிகர் தவான். வெளிநாட்டு மைதானங்களில் ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக செயல்படக் கூடியவர். அதுமட்டுமின்றி வழக்கமாகவே ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணிக்காக பெரிய ரன் குவிப்பில் ஈடுபடுவதும் அவர்தான். தற்போதைய நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது சற்று வருத்தமாக உள்ளது.

Dhawan

ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசியவர். அதுமட்டுமின்றி வெளிநாட்டு மைதானங்களிலும் தனது சிறப்பான நிலையான ஆட்டத்தை அளிக்கக் கூடியவர். அவருக்கு வாய்ப்பு கிடைக்காது ஒரு விதத்தில் வருத்தம் தான். அதேபோன்று ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நிறைய சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்தது சரிதான்.

- Advertisement -

krunal

ஆனால் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவை இணைத்திருக்க வேண்டும். ஏனெனில் கடந்த மூன்று நான்கு வருடங்களாகவே டி20 கிரிக்கெட்டில் விளையாடவே அவரை இந்திய அணி உருவாக்கி வந்தது.

இதையும் படிங்க : வீடியோ : ஏ.பி.டி ஆட்டமிழந்ததும் விரக்தியில் சேரை கையால் தாக்கிய – அவரது செல்ல மகன்

அப்படி இருக்கும் வேளையில் அவரையும் இந்திய அணியில் தேர்வு செய்யாதது சற்று ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருப்பதாகவும், தவான் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வாக தகுதியானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement