- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்திடம் ஒரு வீக்னஸ் இருக்கு.. அதுக்காகவே சாய் சுதர்சனை கொண்டுவரனும் – இர்பான் பதான் ஆதரவு

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் போது தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சனுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டங்களில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. தனது முதல் போட்டியின் போது முதல் இன்னிங்சில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த சாய் சுதர்ஷன் இரண்டாவது இன்னிங்சின் போது 30 ரன்கள் மட்டுமே குவித்தார்.

அடுத்த போட்டியில் சாய் சுதர்சன் விளையாட வேண்டும் – இர்பான் பதான்

இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டு அவரது இடத்தில் கருண் நாயர் விளையாடி வருகிறார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் முதல் மூன்று போட்டிகளிலுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக மீண்டும் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் கருண் நாயரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக சாய் சுதர்சனை கொண்டு வரவேண்டும் என்று விளக்கத்துடன் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கருண் நாயருக்கு முதல் மூன்று போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை அவர் பயன்படுத்த தவறிவிட்டார்.

எனவே அடுத்த போட்டியில் சாய் சுதர்சனை அந்த இடத்திற்கு கொண்டுவர வேண்டும். ஏனெனில் இந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச சற்று கடினப்பட்டுள்ளனர். குறிப்பாக நமது அணியில் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 2 சதங்களையும், ஜடேஜா 4 அரை சதங்களையும் அடித்துள்ளனர்.

- Advertisement -

எனவே மேலும் ஒரு இடது கை ஆட்டக்காரராக சாய் சுதர்சனை மூன்றாவது இடத்திற்கு கொண்டுவர யோசிக்க வேண்டும் என்று தனது கருத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாடியாக வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

இதையும் படிங்க : வெ.இ 27க்கு ஆல் அவுட்டாகி பாதாளத்தில் தவிக்க இந்தியாவே காரணம்.. டேவிட் லாய்ட், லாரா விமர்சனம்

ஏனெனில் அடுத்த போட்டிக்கு முன்னதாக 9 நாட்கள் இடைவேளை உள்ளதால் அவருக்கு இந்த இடைப்பட்ட நாட்கள் ஓய்வுக்கு போதுமானது. எனவே அவரது பணிச்சுமையை காரணம் காட்டாமல் அடுத்த போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -