மீண்டும் அவரு தன்னோட பழைய பார்முக்கு திரும்பிட்டாரு.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க – இர்பான் பதான் எச்சரிக்கை

Irfan-Pathan
- Advertisement -

அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அதற்கடுத்து இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற உள்ள வேளையில் தற்போது இரு அணி வீரர்களும் ஐதராபாத் நகருக்கு சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்திற்குள் வருவதால் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் எதிர்வரும் இந்த தொடர் குறித்து கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு ஆபத்தான வீரராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். கடினமான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களிலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் நிச்சயம் இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய வீரருக்கு பதிலாக – மாற்றுவீரர் அறிவிப்பு

அதோடு விராட் கோலி இந்திய மண்ணில் மிகவும் அசத்தலாக விளையாட கூடியவர். தற்போது அவரது புட் வொர்க் மற்றும் அணுகுமுறையிலும் சிறிது மாற்றத்தையும் அவர் செய்துள்ளார். எனவே நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அவர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறார் என இங்கிலாந்தும் அணியை எச்சரிக்கும் வகையில் இர்பான் பதான் சில கருத்துக்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement