இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய வீரருக்கு பதிலாக – மாற்றுவீரர் அறிவிப்பு

IND-vs-ENG
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்திற்குள் நடைபெற இருப்பதினால் இந்த தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது வரும் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க இருக்கிறது. அதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் ஹைதராபாத் சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகி உள்ளதாக ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அப்படி அணியிலிருந்து வெளியேறிய ஹாரி புரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரையும் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் டேன் லாரன்ஸ் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியா வந்தடைந்து இங்கிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு இந்த இந்திய தொடருக்கான மாற்று வீரராக அவரே அணியில் விளையாடுவார் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டேன் லாரன்ஸ் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இன்னும் 156 ரன்தான் தேவை.. கங்குலியின் மகத்தான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா

24 வயது இங்கிலாந்து வீரரான ஹாரி புரூக் கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 62 ரன்கள் சராசரியுடன் 1181 ரன்கள் குவித்துள்ளார். அவரது இந்த விலகல் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவு என்றே கூறலாம்.

Advertisement