ரோஹித் மாதிரி வேண்டாம்.. அவர மாதிரி புதிய லீடரை உருவாக்குங்க.. இர்பான் பதான் கோரிக்கை

Irfan Pathan 5
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்திய கிரிக்கெட் அணிக்கு 2007ஆம் ஆண்டு தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். அதில் இந்தியாவுக்கு 3 விதமான வெள்ளைப் பந்து ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த அவர் வரலாறு காணாத பொற்காலத்தை உருவாக்கி படிப்படியாக தாம் வகுத்த பதவிகளை விராட் கோலியிடம் ஒப்படைத்தார்.

அந்த வகையில் தோனிக்கு பின் முதலில் 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்திய விராட் கோலி 2016 – 2021 வரை இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வெற்றிகளை பெற்று கொடுத்தார். அதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் முதல் முறையாக ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று கொடுத்தார்.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
இருப்பினும் உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதால் விமர்சனங்களை சந்தித்து சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய அவருக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இந்தியாவை தலைமை தாங்கி வருகிறார். ஆனால் அவரது தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய 4 முக்கிய தொடர்களில் இந்தியா தோற்றது.

இந்நிலையில் 2023 ஆசிய கோப்பை தவிர்த்து பெரிய வெற்றிகளை பதிவு செய்ய தவறிய ரோஹித் சர்மா 36 வயதை கடந்து விட்டதால் அடுத்த கேப்டனை இந்திய அணி நிர்வாகம் உருவாக்க முயற்சிக்க வேண்டுமென இர்பான் பதான் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த கேப்டன் விராட் கோலி போல மிகவும் ஃபிட்டாக அனைத்து போட்டிகளிலும் விளையாடக் கூடியவராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“2024இல் மாற்றங்களை சந்திக்கும். எனவே இந்தியா 2 – 3 லீடர்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் அணி தடுமாற்றங்களை சந்திக்காது. அதே சமயம் எந்த மாதிரியான கேப்டன்களை நாம் உருவாக்குகிறோம் என்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக விராட் கோலி தலைமையில் அந்த 5 வருடங்கள் இந்தியா அபாரமாக செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது”

இதையும் படிங்க: அவருக்கு ஒன்னுன்னா என்னாகுறது.. சீக்கிரம் 6 – 7 பிளேயர்ஸை ரெடி பண்ணுங்க.. இர்பான் பதான் வேண்டுகோள்

“மிகவும் ஃபிட்டாக இருந்த காரணத்தால் அவர் அனைத்து விதமான போட்டிகளிலும் நன்றாக விளையாடி அணியையும் சிறப்பாக செயல்பட வைத்தார். ரோகித் சர்மாவும் உலக கோப்பையில் இந்தியாவை சிறப்பாக செயல்பட வைத்து ஆசிய கோப்பையை வென்றார். எனவே மிகவும் ஃபிட்டாக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடக் கூடிய வீரர் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement