அவருக்கு ஒன்னுன்னா என்னாகுறது.. சீக்கிரம் 6 – 7 பிளேயர்ஸை ரெடி பண்ணுங்க.. இர்பான் பதான் வேண்டுகோள்

Irfan Pathan 3
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததால் ஏற்கனவே தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள இந்தியா குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது.

முன்னதாக தற்போது ஷமி, பும்ரா, சிராஜ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவில் 1992 முதல் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி இந்தியா இம்முறை முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் முகமது ஷமி காயத்தால் விலகியதால் வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா அறிமுக போட்டியிலேயே வள்ளலாக ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

ரெடி பண்ணுங்க:
மேலும் சர்துள் தாக்கூரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் முதல் போட்டியில் பும்ரா, சிராஜ் ஆகியோர் மட்டும் கடுமையாக போராடியும் இந்தியாவால் வெற்றியை பெற முடியவில்லை. இந்நிலையில் முதல் போட்டியில் பும்ராவும் காயத்தை சந்தித்து வெளியேறியிருந்தால் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என இர்பான் பதான் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் 7 முதல் 8 தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உள்ளூர் போட்டிகளில் கண்டறிந்து சர்வதேச தரத்தில் விளையாடுவதற்கு தயாராக வைத்திருங்கள் என்று இந்திய அணிக்கு கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் தற்போது என்ன நடந்துள்ளது என்பதை பாருங்கள்”

- Advertisement -

“அதாவது நம்முடைய பேக்-அப் வீரர்கள் தயாராக இல்லை. நம்மிடம் தரத்தில் பஞ்சம் இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஷமி இல்லாத சூழ்நிலையில் அவர்கள் அசத்துவதற்கு தயாராக இல்லை. இதற்கான அர்த்தம் என்னவெனில் ஒருவேளை கடவுளின் செயலால் பும்ரா காயமடைந்து வெளியேறி விட்டால் நம்மிடம் அவருடைய இடத்தை நிரப்புவதற்கான தரமான பவுலர் இல்லை”

இதையும் படிங்க: தோனியின் 13 ஆண்டுகால சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

“எனவே இந்தியா விரைவில் 7 முதல் 8 வேகப்பந்து வீச்சாளர்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அதை திறமையான வீரர்களில் இருந்து அல்லது ரஞ்சிக் கோப்பையில் இருந்து செய்யுங்கள்” என கூறினார். இருப்பினும் அனுபவம் மிகுந்த புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் போன்ற பவுலர்கள் இருந்தும் அவர்களை தேர்வுக் குழுவினர் கழற்றி விட்டது இந்த தடுமாற்றத்திற்கு ஒரு காரணம் என்றால் முடியாது.

Advertisement